நெல்லை, ஆக.7:

கேரள மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவல் வேகம் எடுத்து உள்ளது. இதையொட்டி அங்கிருந்து தமிழகத்துக்குள் கொரோனா தொற்று பரவாமல் இருக்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

நெல்லைக்கு கேரளாவில் இருந்து வரும் ரயில்களில் வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் மாநகராட்சி சுகாதார பிரிவு ஊழியர்கள் 24 மணி நேர பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

நெல்லையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் பயணிகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்யும் பணி தொடங்கி உள்ளது. அதாவது, தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு வேலைக்கு செல்லும் பயணிகள் கொரோனா பரிசோதனை செய்து கொண்டால் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறதா? இல்லையா? என்ற பரிசோதனை முடிவு செல்போனுக்கு குறுந்தகவலாக அனுப்பி வைக்கப்படும். அதைக்கொண்டு அவர்கள் அங்கு தொடர்ந்து பணிபுரியவும் அல்லது தனிமைப்படுத்திக்  கொள்ளவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நிருபர் நெல்லை டுடே

https://www.nellai.today