தென்காசி, அக்.12:
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில், வாக்கு எண்ணும் பணிகள் குறித்து வட்டார பார்வையாளர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆகியோர்களுடனான ஆலோசனைக்கூட்டம், மாவட்ட தேர்தல் பார்வையாளர்; முனைவர் பொ.சங்கர் தலைமையில், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தர ராஜ் முன்னிலையில் நடைபெற்றது.
தென்காசி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இரண்டு கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. அதனைத் தொடர்ந்து வாக்கு பெட்டிகள் அனைத்தும் பாதுகாப்பாக வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு மைங்களை சுற்றி மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இன்று 12.10.2021 காலை 8.00 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெறவுள்ளது. ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கான வாக்கு எண்ணிக்கை சிஎஸ்ஐ ஜெயராஜ் அன்னபாக்கியம் கலைகல்லூரி, நல்லூரிலும், கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்கான வாக்கு எண்ணிக்கை புனித ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மேட்டூரிலும், கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்கான வாக்கு எண்ணிக்கை ஸ்ரீராம் நல்லமணியாதவா கல்வியியல் கல்லூரி, கொடிக்குறிச்சியிலும், கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியத்திற்கான வாக்கு எண்ணிக்கை சர்தார் ராஜா பொறியியல் கல்லூரியிலும், குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்கான வாக்கு எண்ணிக்கை உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அய்யனேரியிலும், மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்கான வாக்கு எண்ணிக்கை விவேகானந்தா சில்வர் ஜூப்லி மேல்நிலைப்பள்ளி, வீரசிகாமணியிலும், சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்கான வாக்கு எண்ணிக்கை எஸ்விசி வீராசாமிசெட்டியார் பொறியியல் கல்லூரி, புளியங்குடியிலும், செங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கான வாக்கு எண்ணிக்கை எஸ்எம்எஸ்எஸ் அரசுஆண்கள் மேல்நிலைப்பள்ளி, செங்கோட்டையிலும், தென்காசி ஊராட்சி ஒன்றியத்திற்கான வாக்கு எண்ணிக்கை ஸ்ரீபராசக்தி மகளிர் கல்லூரி, குற்றாலத்திலும், வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்கான வாக்கு எண்ணிக்கை வியாசா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சுப்பிரமணியபுரத்திலும் வாக்கு எண்ணிக்கைகள் நடைபெறவுள்ளது.
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் ஜெனெரட்டர் வசதிகள், குடிநீர் வசதிகள், மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டுள்ளன, வாக்கு எண்ணிக்கைக்கான மேஜைகள் அமைத்தல், வாக்கு எண்ணிக்கை மையங்களில் சுற்றியும் வாக்குபெட்டிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள அறையிலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அறையிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளனவா என்பதை குறித்தும், வாக்கு எண்ணும் மையங்களில் கோவிட் தடுப்பு பணிகள் குறித்தும் தேர்தல் நடத்தும் அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம், மாவட்ட தேர்தல் பார்வையாளர் முனைவர் பொ.சங்கர் தலைமையில், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தர ராஜ் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சுரேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மகளிர் திட்டம் குருநாதன், துணை இயக்குநர் சுகாதார பணிகள் மரு.அனிதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (உள்ளாட்சி தேர்தல்) முத்து இளங்கோவன், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். https://www.tenkasi.nic.in
செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today/