தென்காசி, டிச.7:
கலிதீர்த்தான்பட்டியில் இந்திய நாடார்கள் பேரமைப்பின் சார்பில் பனை தொழிலாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு இந்திய நாடார்கள் பேரமைப்பின் மாநில துணைத் தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார் தலைமை தாங்கினார். தென்காசி தெற்கு மாவட்ட தலைவர் ஹரிஹர செல்வன் முன்னிலை வகித்தார்.
இந்த நிகழ்ச்சியில் இந்திய நாடார்கள் பேரமைப்பின் நிறுவன தலைவர் ராகம் சௌந்தர பாண்டியன் நாடார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பனை தொழிலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது பேசியதாவது:-
பதநீர், நுங்கு, பனங்கிழங்கு, பனம் பழம், போன்றவற்றில் இருந்து கருப்பட்டி கற்கண்டு பதப்படுத்தப்பட்ட நொங்கு, பனம் பழ ஜூஸ், பனை சர்க்கரை,
பனங்கிழங்கு பவுடரில் இருந்து தயாரிக்கப்படும் பிஸ்கட் கருப்பட்டியில் இருந்து தயாரிக்கப்படும் சாக்லேட் வகைகள் மற்றும் பனை நார் பனை நரம்பு போன்றவற்றிலிருந்து வீட்டு உபயோக பொருட்கள் தயாரிப்பு பனை ஓலைகளில் இருந்து கலைப் பொருட்கள் போன்ற பல்வேறு உற்பத்தி பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலை நவீன இயந்திரங்களைக் கொண்டு தென்காசி மாவட்டத்தில் விரைவில் இந்திய நாடார்கள் பேரமைப்பின் சார்பில் ஆரம்பிக்க இருக்கிறோம்.
இந்த தொழிற்சாலை மூலம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனை தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பினை இந்த பகுதியில் உருவாக்க முடியும். உருவாக்குவோம். மேலும் பனைத் தொழிலாளர்களுக்கு தமிழக முதல்வர் பல்வேறு சலுகைகளை அறிவித்து இருக்கிறார்கள். அதற்கு இந்திய நாடார்கள் பேரமைப்பு இந்த பனைத் தொழிலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தின் வாயிலாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
மேலும் பனைத் தொழிலாளர்களுக்கு போதுமான பாதுகாப்பு கருவிகள் பனையேறும் கருவிகள் போன்றவற்றை பனைத் தொழிலாளர்களுக்கு தமிழக அரசு இலவசமாக வழங்க வேண்டும். பனையில் இருந்து தவறி விழுந்து இறந்துவிட்டால் அவருடைய குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகையாக வழங்க வேண்டும் என்றார்.
மேலும் இந்த ஆலோசனை கூட்டத்தில் இந்திய நாடார்கள் பேரமைப்பின் மாநில வர்த்தக அணி தலைவர் மாதவன், மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளர் ரமேஷ், தென்காசி தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் ஹரிகிருஷ்ணன், தென்காசி மாவட்ட தொழிற்சங்க பிரிவு தலைவர் மாயகிருஷ்ணன், தெற்கு மாவட்ட செயலாளர் சுல்தான், தர்மராஜ், முப்புடாதி, மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். https://www.tn.gov.in
செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today