தென்காசி, சூலை 23:

குற்றாலம் மெயின் அருவி வாகனங்கள் நிறுத்துமிடத்தில்
ரூ. 55 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
தென்காசி மாவட்டம்  குற்றாலம் மெயின் அருவிக்கரை பகுதியில் வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளது. இங்கு வாகனம் நிறுத்த கட்டணம் வசூலிக்கப்படுவது வழக்கம்.  கட்டணம் வசூலிக்கும் உரிமையை குற்றாலம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் 
ஆண்டு தோறும் ஏலம் விடப்படுகிறது. ஏலம் எடுத்தவர்கள் இந்தக் கட்டணத்தை வசூலித்து வருகின்றனர்.

வாகனங்கள் நிறுத்துமிடம் குண்டும் குழியுமாக சுற்றுலாப் பயணிகளுக்கு இடையூறாக இருந்தது. 
இதனால் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் வாகனம் நிறுத்தும் இடத்தை சீரமைக்க  அரசு உத்தரவிட்டது .
இதனையடுத்து சுற்றுலா வளர்ச்சி நிதியின் கீழ் குற்றாலம் மெயின் அருவி வாகனங்கள் நிறுத்து மிடத்தில் பேவர் பிளாக் அமைப்பதற்காக  ரூ.55 லட்சம் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.
இதனை அடுத்து வாகனங்கள் நிறுத்துமிடத்தில் பேவர் பிளாக் கற்கள் பதிக்கும் பணி  தொடங்கியது. மேலும் இங்கு ஒரு கழிவறையும் அமைக்கப்படுகிறது. .

நிருபர் நெல்லை டுடே

https://www.nellai.today