தென்காசி, சூலை 14:

சிவகிரியில் ஒன்றிய அரசை கண்டித்து காங்கிரசார் சைக்கிள் பேரணி நடத்தினர். 
தென்காசி மாவட்டம் சிவகிரியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி , இளந்தலைவர் ராகுல் காந்தி  ஆணையின்படியும், தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி அறிவுறுத்தலின் படியும் தென்காசி மாவட்ட காங்கிரஸ் ஓ. பி. சி., இளைஞர் காங்கிரஸ், சிவகிரி நகர காங்கிரஸ் சார்பாக பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் ஆகிய பொருட்களின் விலைகளை வரலாறு காணாத அளவிற்கு உயர்த்திய ஒன்றிய பாஜக மோடி அரசை கண்டித்தும் அதன் விலைகளை கட்டுப்படுத்தக்கோரியும் கண்டன ஆர்ப்பாட்டமும் சைக்கிள் பேரணியும் நடந்தது. 


நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட காங்கிரஸ் ஓ. பி. சி. தலைவர் திருஞானம் தலைமை தாங்கினார். மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர்கள் மெடிக்கல் கந்தன், பால் (எ) சண்முகவேல் , புளியங்குடி நகர காங்கிரஸ்  தலைவர் பால்ராஜ், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் மஞ்சுநாத், முதன்மை பொதுசெயலாளர் சுப்பையா, தென்காசி தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் சந்தோஷ், நகர தலைவர் ரபிக் அன்சாரி, ஆகியோர்கள்   முன்னிலை வகித்தனர். 

சிவகிரி நகர காங்கிரஸ் தலைவர் வழக்கறிஞர் சண்முகசுந்தரம் , தொகுதி ஓ. பி. சி தலைவர்  காந்தி ஆகியோர்  வரவேற்றனர்.


தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவர் சட்ட மன்ற உறுப்பினர் பழனிநாடார்  பேரணியை காங்கிரஸ் கொடியசைத்து துவக்கி வைத்தார். மாநில காங்கிரஸ் பேச்சாளர் பால்துரை  கண்டன உரையாற்றினார். மாவட்ட காங்கிரஸ் 
துணைத்தலைவர் வழக்கறிஞர் சங்கை. கணேசன்  சைக்கிள் பேரணியை தலைமையேற்று வழி நடத்தினார். பேரணியில் காங்கிரஸ் நிர்வாகிகள்  கேஸ் சிலிண்டரை தள்ளுவண்டியில் வைத்து மாலையிட்டு பொட்டு வைத்து தள்ளிக்கொண்டும் பைக்கை சைக்கிளால்  கயறு கட்டி இழுத்தும், ஒன்றிய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பியும் ஊர்வலமாக சிவகிரி காந்திஜி கலையரங்கம் முன்பு ஆரம்பித்து நான்கு ரதவீதி வழியாக வந்தனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட காங்கிரஸ் செயலாளர் தெய்வேந்திரன், வீரிப்பு பழனிசாமி, வாசு, வட்டார காங்கிரஸ் பொதுசெயலாளர் உலகநாதன், நகர காங்கிரஸ் நிர்வாகிகள்   நாட்டாண்மை மாணிக்கம், கோ. குருவு,ஆ. முனியாண்டி,  இராமர் நாய்க்கர் செயலாளர் மாடசாமி, சதானந்தன், இளைஞர் காங்கிரஸ் வெள்ளைச்சாமி, கண்ணன், மனோ பாலாஜி மகளிர் காங்கிரஸ் கிருஷ்ணம்மாள்,வள்ளி, ராணி, மற்றும் ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். நகர ஓ. பி. சி. தலைவர் மாரியப்பன் நன்றி கூறினார்.

நிருபர் நெல்லை டுடே

https://www.nellai.today