தென்காசி, சூலை  5-

தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்த வல்லம் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு விழா நடை பெற்றது.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள வல்லம் அன்னை தெரசா மேல் நிலைப்பள்ளியில், தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவிகளுக்கு பாராட்டு விழா மற்றும் உதவித்தொகை வழங்கும் விழா நடந்தது.

விழாவிற்கு தொழிலதிபர்கள் முகம்மது அசன், ராஜா முகம்மது, ஹனீபா ஆகியோர் தலைமை தாங்கினா். பள்ளி தாளாளா் ஆரோக்கியராஜ் அடிகளார் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியா் ஆரோக்கியராஜ் வரவேற்று பேசினார்.

தேசிய திறனாய்வு தேர்வில் கலந்து கொண்டு மாநில அளவில் முதலிடத்தில் வெற்றி பெற்ற மாணவி பிரித்திகா, மற்றும் முப்புடாதி, அனிமெர்சியா, நூர்ஜஹான், ஸ்ரீநந்தா, திருமலைக்குமாரி ஆகியோருக்கு ரொக்கப்பரிசு ரூ.1500-ம், கேடயமும் பள்ளி தாளாளா் ஆரோக்கியராஜ் அடிகளார் வழங்கி பாராட்டினார்.

மேலும்   சிறப்பு பயிற்சியளித்த ஆசிரியா் குத்தாலிங்கத்திற்கு  நினைவு பரிசு வழங்கப்பட்டது.

பள்ளி நலக்குழு உறுப்பினா்கள் நாகூர்மைதீன் பிச்சை, இசக்கிப் பாண்டியன், சின்னமாரியப்பன், ஆனந்த சுரேஷ், செல்லப் பாண்டியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினா்.

முடிவில் பள்ளி தாளாளர் ஆரோக்கியராஜ் அடிகளார் நன்றி கூறினார்.

நிருபர் நெல்லை டுடே

https://www.nellai.todayEdit