தென்காசி, செப் .17-
தென்காசியில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற நல்லாசிரியருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
தென்காசி நகராட்சி நடுநிலைப்பள்ளி 13 வது வார்டு நடுநிலைப் பள்ளி ஆசிரியர் இரா. வின்சென்ட்க்கு இந்த ஆண்டு ஆசிரியர் தினவிழாவில் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் தென்காசி வட்டாரக் கல்வி அலுவலகம் சார்பில் அவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
இந்த விழாவிற்கு தென்காசி .வட்டாரக் கல்வி அலுவலர் மாரியப்பன் தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர் இளமுருகன் முன்னிலை வகித்தார். வட்டார கல்வி அலுவலக கண்காணிப்பாளர் .தொல்காப்பியன் உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் விருது பெற்ற நல்லாசிரியர் இரா.வின்சென்டை பொன்னாடை அணிவித்து வாழ்த்தி பேசினார்கள்.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை தென்காசி வட்டார கல்வி அலுவலக அலுவலர்கள் வேல்சாமி, கந்தசாமி, பட்ட முத்து, .முத்துராமன் , அமிர்தலிங்கம் , திருமதி ஜோதி ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் நல்லாசிரியர் விருது பெற்ற இரா.வின்சென்ட் நன்றி கூறினார்.
செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today/