நெல்லை, ஆக. 1 –


தாமிரபரணி ஆறு, புராதன சின்னங்களை பாதுகாக்க வலியுறுத்தி சைக்கிள் ஓட்டிச் சென்று மாவட்ட ஆட்சித் தலைவர்  விஷ்ணு பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி ஆறு, புராதன சின்னங்களை பாதுகாக்கவும் வலியுறுத்தி  சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

இதில் நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர்  விஷ்ணு, மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணு சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர். மேலும் அவர்கள் ஊர்வலத்தில் சைக்கிள் ஓட்டிச் சென்று பொதுமக்களிடையே
விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ஊர்வலம் மேலதிருவேங்கடநாத புரம் வரை சென்று முடிவடைந்தது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு கூறியதாவது:-

சுற்றுச்சூழல், உடல் நலம், எரிபொருள் சிக்கனம், தாமிரபரணி ஆறு பாதுகாப்பு உள்ளிட்டவற்றை வலியுறுத்தும் வகையில் இந்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

தாமிரபரணி ஆற்றில் கழிவுகள் கலக்கும் இடங்கள் கண்டறியப்பட்டு, அதனை தடுப்பதற்காக தண்ணீரை மறுசுழற்சி முறையில் சுத்தப்படுத்தும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நெல்லை மாநகராட்சி பகுதிகளில் தாமிரபரணி ஆற்றின் ஓரங்களில் கழிவுகளை கலப்பதற்கு தடைவிதிக்கப்பட்டு உள்ளது.

பாரம்பரிய சின்னங்களை பாதுகாக்கும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

நிருபர் நெல்லை டுடே

https://www.nellai.today