நெல்லை, செப்.6-


நெல்லையில் வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. நெல்லை பொருட்காட்சி திடலில் வ.உ.சி. மணிமண்டபத்தில் உள்ள வ.உ.சி. சிலைக்கு நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர்  விஷ்ணு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணு சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today/