தென்காசி, ஆக.16:

தென்காசி மாவட்டத்தில் 25 வருவாய் வட்டாட்சியர்களை  பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சித் தலைவர் ச.கோபால சுந்தரராஜ் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் பிறப்பித்துள்ள வட்டாட்சியர் பணியிட மாற்றம் உத்தரவில் கூறியிருப்பதாவது:

தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக மேலாளர் (பொது) ஹென்றி பீட்டர் தென்காசி தனிவட்டாட்சியராகவும் (ஆ.தி.ந.), சங்கரன்கோவில் தனி வட்டாட்சியர் (ச.பா.தி) சங்கனர்கோவில் தனிவட்டாட்சியராகவும் (கு.பொ.வ.), செங்கோட்டை வட்டாட்சியர் ரோஷன் பேகம், கடையநல்லூர் தனி வட்டாட்சியராகவும் (ச.பா.தி), இப்பணியிடத்தில் இருந்த கங்கா சங்கரன்கோவில் நகர நிலவரி திட்ட தனி வட்டாட்சியராகவும், மாவட்ட வழங்கல் அலுவலக நேர்முக உதவியாளர் சுப்பிரமணியன் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக மேலாளராகவும் (பொது), மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக மேலாளர் (குற்றவியல்) அழகப்பராஜா தென்காசி கோட்டாட்சித்தலைவரின் நேர்முக உதவியாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

வீரகேரளம்புதூர் தனி வட்டாட்சியர் (ச.பா.தி) தென்காசி கோட்ட கலால் அலுவலராகவும், தென்காசி தனி வட்டாட்சியர் (கு.பொ.வ) ரங்கநாயகி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக தனி வட்டாட்சியராகவும் (பேரிடர் மேலாண்மை பிரிவு), சங்கரன்கோவில் தனிவட்டாட்சியர் (கு.பொ.வ) திருவேங்கடம் தனி வட்டாட்சியராகவும் (ச.பா.தி), தென்காசி கோட்டாட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் ஹரிஹரன் செங்கோட்டை தனி வட்டாட்சியராகவும் (கு.பொ.வ) பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

ஆலங்குளம் வட்டாட்சியர் பட்டமுத்து வீரகேரளம்புதூர் தனி வட்டாட்சியராகவும் (ச.பா.தி), செங்கோட்டை தனி வட்டாட்சியர் (கு.பொ.வ) அருணாசலம் தென்காசி வட்டாட்சியராகவும், வீரகேரளம்புதூர் வட்டாட்சியர் வெங்கடேஷ் தென்காசி தனி வட்டாட்சியராகவும் (கு.பொ.வ), மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக தனி வட்டாட்சியர் (தேர்தல்) மாவட்ட ஆட்சித் தலைவர்அலுவலக மேலாளராகவும் (குற்றவியல்), திருவேங்கடம் வட்டாட்சியர் கண்ணன் சிவகிரி தனி வட்டாட்சியராகவும் (ச.பா.தி) பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

சிவகிரி வட்டாட்சியர் ஆனந்த் திருவேங்கடம் வட்டாட்சியராகவும், கோட்டக் கலால் அலுவலர் பரிமளா ஆலங்குளம் வட்டாட்சியராகவும், சங்கரன்கோவில் தனி வட்டாட்சியர் (ஆ.தி.ந) ராமலிங்கம் செங்கோட்டை வட்டாட்சியராகவும், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக தனி வட்டாட்சியர் (பேரிடர் மேலாண்மை பிரிவு) அமிர்தராஜ் மாவட்ட வழங்கல் அலுவலக நேர்முக உதவியாள ராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

தென்காசி தனி வட்டாட்சியர் (ச.பா.தி) முருகுசெல்வி வீரகேரளம்புதூர் வட்டாட்சியராகவும், சங்கரன்கோவில் நகர நிலவரி திட்ட தனி வட்டாட்சியர் சத்தியவள்ளி சிவகிரி வட்டாட்சியராகவும், தென்காசி வட்டாட்சியர் சுப்பையன் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக தனி வட்டாட்சியராகவும் (தேர்தல்), சங்கரன்கோவில் தனி வட்டாட்சியர் (ச.பா.தி) பாலசுப்பிரமணியன் சங்கரன்கோவில் தனி வட்டாட்சியராகவும் (ஆ.தி.ந), தென்காசி தனி வட்டாட்சியர் (ஆ.தி.ந) பாபு தென்காசி தனி வட்டாட்சியராகவும் (ச.பா.தி), சிவகிரி தனி வட்டாட்சியர் செல்வகுமார் சங்கரன்கோவில் தனி வட்டாட்சியராகவும் (ச.பா.தி) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பணியிட மாறுதல் செய்யப்பட்டவர்கள் உடன் புதிய பணியிடத்தில் பணியேற்க வேண்டும். இப்பணியிட மாறுதல் தொடர்பாக எவ்வித விடுப்போமுறையீடோ ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.  ஏன மாவட்ட ஆட்சித் தலைவர் ச.கோபாலசுந்தரராஜ் பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவித்துள்ளார்.

நிருபர் நெல்லை டுடே

https://www.nellai.today