தென்காசி, ஆக. 6:

தென்காசி மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் கோபால சுந்தரராஜ் துவக்கி வைத்தார்.
தென்காசி மாவட்டம் மேலநீலிதநல்லூர்; வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட கடையாலுருட்டியில் தமிழக முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க “மக்களைத் தேடி மருத்துவம்” திட்டத்தின் துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஈ.ராஜா, தென்காசி சட்டமன்ற உறுப்பினர்  எஸ்.பழனிநாடார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தர ராஜ், தலைமை வகித்து மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்கு மருத்துவ குழு செல்லும் வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்ததுடன்; மகளிர் சுகாதார தன்னார்வல பணியாளர்களுக்கு மருத்துவ பயன்பாட்டிற்கான உபகரணங்களை வழங்கினார்.

இதன் பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் கோபாலசுந்தரராஜ் பேசியதாவது:-
தமிழக முதலமைச்சர்; தலைசிறந்த திட்டமான  “மக்களைத் தேடி மருத்துவம்” எனும் திட்டத்தை இன்று துவக்கி வைத்துள்ளார்;.  இதன் முலம் தமிழகத்தில் ஒட்டு மொத்த மக்களும் ஆரோக்கியமாக வாழ்ந்திட வேண்டும் என்பதே ஆகும். அந்தவகையில் தென்காசி மாவட்டத்தில் சுகாதாரத்துறையின் மூலம் 10 வட்டாரங்களில் செயல்படும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் மருத்துவக்குழுவின் தொடர் கண்காணிப்பில் இருந்துள்ள 41,172 நோயாளிகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
மேலநீலிதநல்லூர்  வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சுகாதார பணியாளர்களை கொண்டு வீடு வீடுகளாக நோய்த்தொற்று உள்ளவர்களை கண்டறியப்பட்டதன் அடிப்படையில்  1808 நோயாளிகளுக்கு  முதற்கட்டமாக இத்திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து படிப்படியாக அனைத்து வட்டாரங்களிலும்  செயல்படுத்தப்பட உள்ளது.

இத்திட்டத்தின் மூலம் வெப்ப அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற தொடர் நோய் உள்ளவர்களுக்கு அரசு மருத்துவ மனையில் மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டுவருவதை கணக்கெடுத்து அந்தந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட கிராமங்களில் உள்ள நோயாளிகளை கண்டறிந்து அவர்களின் இல்லங்களுக்கே சென்று ஒரு மாதத்திற்கு தேவையான மருந்து மாத்திரைகள் வழங்கப்படுகிறது. இதற்காக ஒரு வாகனம் ஒதுக்கீடு செய்து அந்த வாகனத்தில் ஒரு பிசியோதெரபி மருத்துவர், ஒரு செவிலியர் பணி மேற்கொள்வார்கள் இவர்களுடன் அந்த பகுதியில் உள்ள மகளிர் சுகாதார தன்னார்வ பணியாளர்கள் உதவியுடன் பணிமேற்கொள்வார்கள்.

மகளிர் சுகாதார தன்னார்வ பணியாளர்களுக்கு மருத்துவத்துறையின் முலம் போதியளவு மருத்துவ உதவிக்கான பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. தொடர் நோய் உள்ளவர்கள் நடக்க முடியாத சூழ்நிலையை உணர்ந்து பிசியோதெரபி மருத்துவர் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார். அவர் நோயாளிகளின் வீட்டிற்கே சென்று நோயாளிகளின் தன்மைக்கேற்ப உடற்பயிற்சியளிப்பார்கள்.
மேலும், 45 வயதிற்கு மேற்பட்ட நபர்களுக்கு “தொற்றா நோய்” உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சையளித்தல், வயது முதிர்ந்த நபர்களுக்கு சேவை செய்தல், நீரிழிவு நோய், இரத்த அழுத்தம்,  முடநீக்கு சிகிச்சை மற்றும் பயிற்சியளித்தல், கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி போடுதல், தாய்மார்களுக்கு பிரசவத்திற்கு பிந்தைய சேவை போன்ற நல்ல நோக்கங்களை கொண்டு இத்திட்டம் செயல்படுத்தபட உள்ளது.

இத்திட்டத்தினை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் பணியமர்த்தப்பட்டுள்ள தொற்றா நோய் செவிலியர்கள் மருந்தாளுநர்கள் மற்றும் மருத்துவ அலுவலர்கள் முலம் செயல்படுத்தப்படும். தற்பொழுது மேலநீலிதநல்லூர்; வட்டாரத்தில் முதற்கட்டமாக 11 பெண் சுகாதார தன்னார்வலர்களும் 1 இயன்முறை மருத்துவர்கள், நோய் ஆதரவுச் செவிலியர்களும் இல்லம் தேடி வரும் சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளார்கள் எனவே பொதுமக்களாகிய நீங்கள் இத்திட்டத்தினை நல்லமுறையில்  பயன்படுத்தி பயன்பெற வேண்டும்.
மேலும், கொரோனா 3-ம் அலை பரவ வாய்ப்புள்ள இச்சூழ்நிலையில் 18 வயத்திற்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டும், பொதுமக்கள் வெளியில் வரும் போது முகக்கவசம் அணிந்தும், கைகளை அடிக்கடி கழுவவும், சமுக இடைவெளியை கடைபிடித்தும்  கொரோனா பரவலை தடுப்பதற்கு முழு ஒத்துழைப்பு தரவேண்டுமென  மாவட்ட ஆட்சித்தலைவர்  ச.கோபால சுந்தரராஜ்  பேசினார்.

இந்நிகழ்ச்சியில் துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் மரு.அருணா, தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சிவபத்மநாபன், மாவட்ட தொற்றாநோய் பிரிவு திட்ட அலுவலர் மரு.கோகுல், மேலநீலிதநல்லூர்; வட்டார மருத்துவ அலுவலர் மரு.மதனசுதாகர் மற்றும் சுகாதாரபணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நிருபர் நெல்லை டுடே

https://www.nellai.today