தென்காசி, ஆக. 2:

தென்காசியில் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தரராஜ் துவக்கி வைத்தார்.

தென்காசி மாவட்டத்தில் கொரோனா விழிப்புணர்வு தொடர் பிரச்சார துவக்க விழா மூன்றாம் அலை வராமல் தடுக்க தற்போது பல்வேறு நடவடிக்கைகள் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கொரோனா பெருந்தொற்று எண்ணிக்கை மீண்டும் உயராவண்ணம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது.
அதன் தொடக்கமாக மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் கொரோனா விழிப்புணர்வு பதாகைகள் வெளியிட்டு, கொரோனா விழிப்புணர்வு தொடர் பிரச்சாரத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தரராஜ் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஈ.ராஜா, வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மரு. சதன் திருமலைக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அதனைத் தொடர்ந்து தென்காசி தினசரி வார காய்கறி சந்தையில் முகக்கவசம், கைகழுவும் முறை, சமூக இடைவெளியை பின்பற்றக்கூடிய துண்டு பிரசுரங்கள் பொதுமக்களிடம் வழங்கி விழிப்புணர்வு ஏற்;படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒரு வார காலத்திற்கு தினந்தோறும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பல்வேறு துறைகள் மூலம் ஒருங்கிணைந்து துண்டுப் பிரசுரங்கள், சிற்றேடுகள் கடிவிட்டர் , முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களிலும் ; விழிப்புணர்வு ஏற்படுத்தவும்; கடை வீதிகள், இரயில் நிலையம், பேருந்து நிலையம் போன்ற பொது இடங்களில் வரும். மக்களிடையே முகக்கவசம் அணியவும் , சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும்,, “வியாபாரிகள் நலச்சங்கங்களுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தனியார் மருத்துவமனைகள் மற்றும் இந்திய மருத்துவ சங்கத்தின் மூலம் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தவும், மாணவர்களுக்கிடையே குறும்படப் போட்டிகள், ஒவியப்போட்டிகள், கொரோனா விழிப்புணர்வு வாசகத்தை உருவாக்குதல், எப்.எம் ரேடியோ மூலம் கேள்வி பதில் நிகழ்ச்சிகள், மீம்ஸ உருவாக்குதல் போன்றவற்றை நடத்தவும், கிராமிய கலைஞர்கள் மூலம் விழிப்புனார்வு ஏற்படுத்தவும் நோய் எதிர்ப்புத் தன்மை அதிகரிக்க கபசுர குடிநீர் வழங்கவும்; கிராம அளவில்/ வார்டு அளவில் / மண்டல அளவில் 100 சதவிகிதம் கொரோனா தடுப்பூசியைச் செலுத்திய உள்ளாட்சி அமைப்புகளை கௌரவித்துப் பரிசுகள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா மேலாண்மைகக்கான வழிகாட்டு நடைமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி, பொது இடங்களில் முகக்கவசம் அணிவது; சமூக இடைவெளியினைக் கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு / கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது ஆகியவற்றைக் கட்டாயம் பின்பற்றவும், நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன், பொதுமக்கள் உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை / சிகிச்சை பெறவும, மக்கள் அனைவரும் ;அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி கொரோனா தொற்றினை முற்றிலும் அகற்ற உதவிட வேண்டும் என தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்நிகழ்ச்சியில் இணை இயக்குநர் நலப்பணிகள் மரு. வெங்கட்ரெங்கன், துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் மரு.அருணா மற்றும் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சிவ பத்மநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிருபர் நெல்லை டுடே

https://www.nellai.today