தென்காசி, ஆக.16:
தென்காசியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கலெக்டர் ச.கோபால சுந்தரராஜ் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
இந்தியத் திருநாட்டின் 75வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது அதன்படி தென்காசி ஐசிஐ அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் இன்று காலை 09.05 மணிக்கு தென்காசி மாவட்ட கலெக்டர் ச.கோபால சுந்தரராஜ் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
அதனைத்தொடர்ந்து தென்காசி மாவட்ட கலெக்டர் ச.கோபால சுந்தர ராஜ் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆர்.கிருஷ்ணராஜ் ஆகியோர் திறந்த ஜீப்பில் நின்றவாறு போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளை கௌரவிக்கும் நிகழ்ச்சி நடைபெறறது. தேசியக்கொடியின் வண்ணத்தில் பலூன்களையும், அதனைத் தொடர்ந்துசமாதானப் புறாக்களையும் பறக்க விட்டார்.
அதனைத்தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய 78 அரசு ஊழியர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் ஊழியர்களுக்கு கலெக்டர் கோபால சுந்தரராஜ் நற்சான்றிதழ்களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட வருவாய் அலுவலர் இரா. ஜனனி சௌந்தர்யா, தென்காசி டிஎஸ்பி மணிமாறன், தென்காசி கோட்டாட்சித் தலைவர் ராமச்சந்திரன், மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் லெனின் பிரபு, தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம் குமார், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனிநாடார், தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன், வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் மா.செலத்துரை,
தாசில்தார் அருணாசலம், தென்காசி மாவட்ட அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் இரா.ஜெஸ்லின், தென்காசி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் வெ.சண்முகசுந்தரம், தென்காசி காவல்துறை ஆய்வாளர் பாலமுருகன், சுதந்திர போராட்ட தியாகி லெட்சுமி காந்தன் பாரதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டிஎஸ்ஆர்.வேங்கடரமணன், ஆய்க்குடி அமர்சேவா சங்க தலைவர் இராமகிருஷ்ணன், மற்றும் தென்காசி மாவட்ட காவல்துறையினர், ஆயுதப்படை போலீசார், சிறப்பு படை போலீசார், வனத்துறையினர் மற்றும் ஊர்காவல் படையினர், என்சிசி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
நிருபர் நெல்லை டுடே