தென்காசி, அக்.2:


தென்காசி மாவட்டத்தில்உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில்  டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்படும் நாட்கள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவித்துள்ளார். இதுகுறித்து  தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தர ராஜ்; வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

தென்காசி மாவட்டத்தில் 02.10.2021 காந்தி ஜெயந்தி அன்றும், கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 06.10.2021 மற்றும்  09.10.2021 ஆகிய தினங்களில் வாக்குபதிவு நடைபெறுவதை முன்னிட்டு, 04.10.2021 அன்று காலை 10.00 மணி முதல் 06.10.2021 அன்று நள்ளிரவு 12.00 மணி வரையிலும் இ  07.10.2021 அன்று காலை 10.00 மணி முதல் 09.10.2021 அன்று நள்ளிரவு 12.00 மணி வரையிலும், மேலும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான 12.10.2021 அன்று வாக்கு எண்ணப்படும் மையங்களிலிருந்து  5 கி.மீ. சுற்றளவில் உள்ள அரசு மதுபானக்கடைகள், அதனுடன் இணைந்து செயல்படும் மதுபானக்கூடங்கள் மற்றும் தங்கும் விடுதியுடன் இணைந்து செயல்படும் மதுபானக்கூடங்கள் அனைத்தும் மற்றும் 19.10.2021 மீலாடிநபி ஆகிய மேற்கண்ட தினங்களில் மட்டும் மூடப்படும். மேலும், அன்றைய தினங்களில் மட்டும் மதுபான விற்பனை ஏதும் நடைபெறாது என மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தர ராஜ்  செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today/