தென்காசி, நவ .26:
தென்காசி மாவட்டம் , குற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிர் கல்லூரியில் வணிகவியல் துறையில் இணையதளம் வழியாக மேகக் கணக்கியல் தொடர்பான நிகழ்ச்சி நடைபெற்றது. குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரி செயலர் எம். அன்புமணி ஆலோசனையின்படி நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கல்லுாரி முதல்வர் ரா.ஜெய்நிலாசுந்தரி தலைமையுரையாற்றினார், வணிகவியல் துறை பேராசிரியர் நா.ராஜேஸ்வரி வரவேற்றுபேசினார்.
முன்னுரையை முனைவர் பெ.நாகேஸ்வரி வழங்கினார், சிறப்பு விருந்தினரை முனைவர் இரா. மாலினி அறிமுகம் செய்தார். இந்த விழாவின் சிறப்பு விருந்தினராக சென்னை டெமிநோஸ் இந்தியா பிரைவேட் லிமிட்டெட் , விநியோக மேலாளர் இரா.கார்த்திகேயன் மேக கணக்கியல் தொழில்நுட்பம் சிறுவாணிபத்தில் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது.
என்பதையும் மேக கணக்கியல் தொழில் நுட்பத்திற்கும் , நடைமுறை கணக்கியல் தொடர்பான பிற தொழில் நுட்பத்திற்கும் உள்ள வேறுபாடுகள் பற்றியும்,மேகக் கணக்கியல் தொழில்நுட்பம் எதிர்கால வேலைவாய்ப்புக்கு எவ்வாறு மாணவிகளுக்கு பயன் அளிக்கிறது என்பது பற்றியும் விளக்கினார்.
இந்த நிகழ்ச்சியில் 126 மாணவிகளும் , 17 ஆசிரியர்களும் மொத்தம் 143 பேர்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவிற்கான முன் ஏற்பாடுகளை ஸ்ரீபராசக்தி மகளிர் கல்லுாரியின் பேராசிரியர்கள் ரா.ஆண்டாள் இசக்கி ராணி , வி.ஜெய்சுதாதேவி , க.சங்கரி , வீ.சித்ரா , மு.செல்வலெட்சுமி , நா.சுப்புலெட்சுமி ஆகியோர் செய்து இருந்தனர். விழாவின் முடிவில் குற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிர் கல்லுாரி வணிகவியல் சங்க செயலாளர் மாணவி மா.அதிஷ்டலட்சுமி நன்றியுரையாற்றினார். https://www.sriparasakthicollege.edu.in
செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today