தென்காசி, செப். 3-

செங்கோட்டையில் தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
செங்கோட்டை நகரசபை தூய்மை பணியாளர்கள் வேலைநிறுத்தம் செய்து நகரசபை அலுவலக வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூய்மை பணியாளர்களுக்கு அரசு நிர்ணயித்த சம்பளம் வழங்க வேண்டும். 4 ஆண்டுகளாக பிடித்தம் செய்த பணத்திற்கு ரசீது வழங்க வேண்டும். இ.எஸ்.ஐ. மருத்துவ அட்டை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.
ஊரக வளர்ச்சி ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சின்னச்சாமி தலைமை தாங்கினார்.
சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் வேல்முருகன்இ மாவட்ட துணை செயலாளர் லெனின்குமார்இ மாதர் சங்க மாவட்ட தலைவர் ஆயிஷா பேகம்இ விவசாய தொழிற்சங்க மாவட்ட பொருளாளர் முருகேசன்இ கட்டுமான தொழிலாளர் சங்க தாலுகா பொருளாளர் முருகன்இ நிர்வாகிகள் சேட் முகம்மதுஇ சங்கர் மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today/