தென்காசி, ஆக.2:
தென்காசி மாவட்டத்திற்கு தனி தொழிலாளர் நலவாரியம் அமைக்க வேண்டும் என சிஐடியு வலியுறுத்தியுள்ளது.
குற்றாலத்தில் தென்காசி மாவட்ட சிஐடியு ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கத்தின் மாவட்ட குழு கூட்டம் மாவட்ட தலைவர் இராஜசேகரன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில். ஆட்டோ சங்க மாநில பொதுச்செயலாளர் சிவாஜி கலந்துகொண்டு மாநில குழு முடிவுகளையும், தென்காசி சிஐடியு மாவட்ட செயலாளர் வேல்முருகன் மாவட்ட குழு முடிவுகளையும் விளக்கி பேசினர்.
ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் வன்னியப் பெருமாள் நடைபெற்ற வேலைகள் மற்றும் எதிர்கால இயக்கங்கள் குறித்தும் பேசினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு :
ஆட்டோ தொழிலாளர்களுக்கு என தனி நலவாரியம் அமைக்க வேண்டும் . பெட்ரோல் டீசல் விலைகளை ஜிஎஸ்டி வரம்புகள் கொண்டுவர வேண்டும்.
ஆட்டோவிற்கு பெட்ரோல் , டீசல் மானிய விலையில் தர வேண்டும். நலவாரிய நிதி பண பலன்களை உயர்த்த வேண்டும். தென்காசி மாவட்டத்திற்கு தனி தொழிலாளர் நலவாரிய அலுவலகம் அமைக்க வேண்டும்.
புதிய மோட்டார் வாகன சட்டதிருத்தத்தை ரத்து செய்ய வேண்டும் என தென்காசி மாவட்டத்தில் ஆகஸ்ட் 17-ல் ஆலங்குளம், கடையம், தென்காசி, சங்கரன்கோவில் ஆகிய நான்கு மையங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது,
சிஐடியு விவசாயசங்கம் , விவசாய தொழிலாளர் சங்கம் , அனைந்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பாக மத்திய மோடி அரசை கண்டித்து நடக்கும் மனித சங்கிலி இயக்கத்தில் ஆட்டோ தொழிலாளர்கள் பங்கேற்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிருபர் நெல்லை டுடே