நெல்லை, நவ.24:
நெல்லையில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும். அரசு போக்குவரத்து கழகங்களின் வரவு- செலவு நிதி பற்றாக்குறையை அரசு ஈடுகட்ட வேண்டும். இதற்காக பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டுவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
பணிமனை தலைவர் காசிராஜன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ஜோதி உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்து பேசினார். சி.ஐ.டி.யு. மாநிலக்குழு உறுப்பினர் பெருமாள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு கோரிக்கையை விளக்கி பேசினார்.
உண்ணாவிரத போராட்டத்தில் நிர்வாகிகள் காமராஜ், பாலசுப்பிரமணியன், தங்கதுரை ஜோன்ஸ் எட்வர்ட் ஞானராஜ், செண்பகம் முத்துகிருஷ்ணன், சரவணன், பழனிமாணிக்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். https://www.citucentre.org.in
செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today