தென்காசி,  ஆக.10:

தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகில் சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி. மற்றும் வேளாண் சங்கங்கள் சார்பில் மனித சங்கிலி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

மத்திய அரசின் வேளாண் திருத்த சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்யக்கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  மனித சங்கிலி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்த போராட்டத்திற்கு சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் வேல்முருகன் தலைமை தாங்கினார்.

ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் சுப்பையா, சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் அய்யப்பன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் வெங்கடேஷ், மாதர் சங்க மாவட்ட தலைவி ஆயிஷா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன்,

இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் இசக்கிதுரை, விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ராமகிருஷ்ணன் மற்றும் தொழிற்சங்கத்தினர், விவசாயிகள் சங்கத்தினர், விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

நிருபர் நெல்லை டுடே

https://www.nellai.today