தஞ்சை மே 28 தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பொதுமக்கள் சிகிச்சை பெறலாம் என ஆட்சியர் கோவிந்தராவ் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு, முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் 34 தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்க அரசால் வரையறுக்கப்பட்ட கட்டணத்துக்கு உட்பட்டு முற்றிலும் இலவசமாக சிகிச்சை பெறலாம்.

ஆண்டு வருமானம் ரூபாய் 72 ஆயிரத்துக்கும் கீழ் இருக்கும் அனைவருமே முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சை பெற தகுதியானவர்கள். இதுவரை காப்பீட்டு அட்டை பெறாதவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் காப்பீட்டு திட்ட அலுவலகத்தில் பதிவு செய்து உடனடியாக காப்பீட்டு அட்டை பெற்றுக்கொள்ளலாம். தஞ்சையில் அபி அண்ட் அபி மருத்துவமனை, ஆதித்யா மெடிக்கல் சென்டர் பல்நோக்கு ஆஸ்பத்திரி, டெல்டா கேர் ஆஸ்பத்திரி, புனித ஆரோக்கியமாதா ஆஸ்பத்திரி, ஆர்கே மருத்துவமனை, வாஞ்சிலிங்கம் மருத்துவமனை, கல்பனா மருத்துவமனை, கண் மருத்துவமனை கேஜி மருத்துவமனை, மீனாட்சி மருத்துவமனை.

எம்கே மருத்துவமனை, நேஷனல் பார்மா மருத்துவமனை, நியூ சுகம் மருத்துவமனை ரோகிணி மருத்துவமனை, ஆர்எஸ்எஸ் மருத்துவமனை, சரவணா மருத்துவமனை, ஸ்ரீ குமரன் மருத்துவமனை, சுகம் மருத்துவமனை, தங்க சாரதா மருத்துவமனை.
வினோதன் நினைவு மருத்துவமனை முதலியவை தஞ்சையிலும்.

பட்டுக்கோட்டை ஐஸ்வர்யா மருத்துவமனை, திராவிடன் மருத்துவமனை, கனக கனகேஸ்வரன் மருத்துவமனை, ஷிபா மருத்துவமனை, சிவம் நர்சிங் ஹோம், ஸ்ரீ நாடி மருத்துவமனை,ஆகியவற்றிலும்

கும்பகோணம் ஏவி ஆர் ரமணி பாலி கிளினிக் காருண்யா சுகாலயா மருத்துவமனை கே எஸ் மருத்துவமனை மெட்வே மருத்துவமனை எஸ்டி மருத்துவமனை, விஜய் பாலிகிளினிக், ஆகியவற்றிலும் காப்பீட்டு திட்டத்தில் பொதுமக்கள் சிகிச்சை பெறலாம் இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி நிருபர்.
தஞ்சை