நெல்லை,  டிச.8:

தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை சார்பாக  முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறி தோட்டம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த ஊட்டச்சத்து தளைகள் வழங்கும் திட்டத்தின் துவக்க விழா திருநெல்வேலியில் நடைபெற்றது . 
இந்த நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சிதலைவர் விஷ்ணு,  பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்.

அப்துல்வகாப் ஆகியோர் கலந்து கொண்டு 15 பயனாளிகளுக்கு காய்கறி விதைகள் மற்றும் தளைகளை வழங்கினார்கள். காய்கறி விதை தளைகளில் கத்தரி , மிளகாய் , வெண்டை தக்காளி , அவரை , வெள்ளரி காராமணி , சாம்பல்பூசணி , முருங்கை , பூசணி , கொத்தவரை , கீரைகள் போன்ற 12 வகையான விதைகள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.

மேம்படுத்த ஊட்டச்சத்து தளைகளில் பப்பாளி , எலுமிச்சை , கறிவேப்பிலை , ரூ .15 – க்கு , 3500 எண்களும் மூலிகை செடிகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை முருங்கை , திப்பிலி , கற்பூரவல்லி , புதினா , கற்றாழை ஆகிய 8 செடிகள் அடங்கிய தளைகள் ரூ .25 க்கு , 5000 எண்களும் மாடித்தோட்ட காய்கறி தளைகளில் 6

வகையான காய்கறி விதைகள் , செடி வளர்க்கும் பைகள் 6 எண்கள் , இரண்டு கிலோ அளவிலான தென்னை நார் கட்டிகள் 6 எண்கள் , 400 கிராம் உயிர் உரங்கள் , 200 கிராம் உயிர் கட்டுப்பாட்டு காரணிகள் , 100 மி.லி இயற்கை பூச்சி விரட்டி , சாகுபடி முறைகளை விளக்கும் கையேடு ஒரு எண் ஆகியன மானிய விலையில் ரூ 225 க்கு ,1000 எண்களும் திருநெல்வேலி மாவட்டத்திற்கு வரப்பெற்றுள்ளது.

இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் பொதுமக்கள் https // tnhorticulture.tn.gov.in / kit என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம் எனவும் தங்கள் குடும்பத்திற்கு தேவையான காய்கறிகள் , பழங்கள் மற்றும் மூலிகை செடிகளை வீட்டிலேயே  சாகுபடி செய்து நோயற்ற வாழ்வு வாழ்ந்திடவும் வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர்  கேட்டுக்கொண்டார்.

இந்த துவக்க விழாவில் தோட்டக்கலை துணை இயக்குநர் ( பொ ) .சூ.சுபாவாசுகி , வேளாண்மை இணை இயக்குநர் கஜேந்திரபாண்டியன், மாவட்ட ஆட்சி தலைவரின் நேர்முக உதவியாளர் அசோக்குமார் மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநர்கள் மா. இளங்கோ , சண்முகநாதன், தோட்டக்கலை துறை  வள்ளியம்மாள் மற்றும் தோட்டக்கலை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். https://www.tnagrisnet.tn.gov.in

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today