Category: பெயர்ப் பலகை

மீனவ சமுதாய இளைஞர்களுக்கு சிவில் சர்வீஸ் தேர்வுக்கு பயிற்சி!

தென்காசி , டிச.28: மீனவ சமுதாயத்தைச் சார்ந்த பட்டதாரி இளைஞர்கள் இந்திய குடிமைப்பணியில் சேருவதற்கான போட்டித் தேர்வில் சிறப்பிக்க ஆயத்த பயிற்சி அளிக்கப்படுகிறது என தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தரராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:…

புளியரையில் ஒமைக்ரான் பரவாமல் தடுக்க மருத்துவ பரிசோதனை தீவிரம்!

தென்காசி,  டிச.28: கேரளாவில் இருந்து தமிழகத்தின் எல்லை மாவட்டங்களில் ஒமைக்ரான் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இருமாநில எல்லை பகுதியான தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள புளியரை சோதனை சாவடியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டு உள்ளது. அங்கு கேரளாவில்…

அரசு மருத்துவக்கல்லூரி அமைக்க ஓய்வூதியர் சங்கம் வலியுறுத்தல்!

தென்காசி டிச . 25: தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் தென்காசி மாவட்டத்தின் 2 வது மாவட்ட பேரவை மற்றும் ஓய்வூதியர் தினவிழா தென்காசியில் மாவட்ட தலைவர்  சலீம் முகம்மது மீரான் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர் பாலுச்சாமி…

தேன் பொத்தையில் பயிர்க்கடன் வழங்கும் முகாம்!

செங்கோட்டை டிச, 22: செங்கோட்டையை அடுத்துள்ள 0.1761 தேன்பொத்தை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க  வளாகத்தில் வைத்து பயிர்க்கடன் வழங்கும் முகாம் நடந்தது. முகாமிற்கு சங்கத்தின் தலைவர் பெரியசாமி தலைமை தாங்கினார். தென்காசி சரக கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளா் கார்த்திக்…

தென்காசி மாவட்ட ஆதிதிராவிடர் நல விடுதிகளில் அமைச்சர் ஆய்வு!

தென்காசி, டிச. 21- தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள, அரசு ஆதி திராவிடர் நல மாணவர்கள் மற்றும் மாணவியர்கள் விடுதியினை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் எம்.கயல்விழி செல்வராஜ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தென்காசி மாவட்ட அரசு ஆதி திராவிடர் நல மாணவிகள் விடுதியில்…

சிறந்த பள்ளிக்கான விருது தென்காசி சிஇஓ வழங்கினார்!

தென்காசி,  டிச.20: தமிழக அரசு ஒவ்வொரு கல்வியாண்டிலும் சிறப்பாக செயல்படும் பள்ளிகளை தேர்வு செய்து அவர்களின் கல்விப் பணியினை பாராட்டும் வகையில் “சிறந்த பள்ளிக்கான விருது” வழங்கி கௌரவிக்கின்றது.  அதன் அடிப்படையில் தென்காசி மாவட்டத்தில் 2019-2020ம் கல்வியாண்டில் சிறப்பாக செயல்பட்ட 3…

தென்காசி அரசு மருத்துவமனையில் எய்ட்ஸ் நோய் கருத்தரங்கம்!

தென்காசி, டிச.20: தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உலக எய்ட்ஸ்  தினத்தை முன்னிட்டு எய்ட்ஸ்  நோய் பற்றிய  கருத்தரங்கம்  நடைபெற்றது. இந்த கருத்தரங்கு நிகழ்ச்சிக்கு தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப் பாளரும் ,அரசு டாக்டர்கள் சங்க மாநில செயலாளருமான…

பூலாங்குளம் அரசு மேல்நிலை பள்ளியில் பொதுத்தேர்வு மையம்!

தென்காசி, டிச.15: தென்காசி கல்வி மாவட்டம் பூலாங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பொதுத்தேர்வு மையத்திற்கு அனுமதி பெற்றுத் தந்த தென்காசி தெற்கு  மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதனுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள பூலாங்குளம் அரசு மேல்நிலைப்…

மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை தென்காசி ஆட்சியர் அறிவிப்பு!

தென்காசி டிச .14: தென்காசி மாவட்டத்தில் 2021- 2022 ம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை பெற தகுதியுள்ள மாணவ, மாணவிகள் உடனே விண்ணப்பிக்கலாம் என்று தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபாலசுந்தரராஜ் அறிவித்துள்ளார். தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் .ச.கோபால சுந்தர ராஜ் வெளியிட்டுள்ள…

நெல்லையில் ரூ.6 கோடி தொழில்கடன் ஆட்சியர் விஷ்ணு வழங்கினார்!

நெல்லை,  டிச.9: நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர்   அலுவலக கூட்ட அரங்கில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் சார்பில் சிறப்பு தொழில் கடன் மேளா  நடைபெற்றது. இதில் 7 பேருக்கு ரூ.5.72 கோடி மதிப்பில் கடன் அனுமதி ஆணைகள், ஒருவருக்கு ரூ.22½…