தென்காசி, சூலை 6 –

தென்காசி  மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மீண்டும் கண் புரை அறுவை சிகிச்சை  சேவை துவங்கியது. 

தென்காசி  மாவட்ட அரசுதலைமை மருத்துவமனையில் பெருந்தொற்று காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்புரை அறுவை சிகிச்சை   கடந்த வெள்ளிக்கிழமை முதல்  மீண்டும் துவங்கியது. 
கடந்த வெள்ளிக்கிழமை அறுவை சிகிச்சை செய்துகொண்ட 4 நோயாளிகளும் இன்று பூரண நலம் அடைந்து வீட்டிற்கு சென்றனர். இன்று 12 கண் புரை நோயாளிகள் கண் அறுவை சிகிச்சைக்காக உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ஜெஸ்லின் கண் மருத்துவமனையை பார்வையிட்டு நோயாளிகளின் நலம் விசாரித்தார். கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகம் உள்ள நிலையிலும் கண் அறுவை சிகிச்சையினை தொடங்கி சிறப்பான சேவை செய்யும் கண் மருத்துவர்  ராஜலட்சுமி,  மருத்துவர் ஆலிஸ் ரூத் மேரி, செவிலியர் களையும், கண் மருத்துவமனை பணியாளர்களையும் மருத்துவமனை கண்காணிப்பாளர்   பாராட்டினார். 


கண் மருத்துவர் ராஜலட்சுமி  சேவையை பாராட்டி பொன்னாடை போர்த்தி பரிசுகள் வழங்கி கண்காணிப்பாளர் ஜெஸ்லின்   கவுரவித்து, பேசும்போது,  
இந்த வசதியினை தென்காசி மாவட்ட அனைத்து கண்புரை நோயாளிகளும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். 


தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அதிக அளவில் கண்புரை நோய் அறுவை சிகிச்சை செய்ய, அனைத்து ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் கண் உதவியாளர்கள் ஒத்துழைக்குமாறு மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ஜெஸ்லின் கேட்டுக்கொண்டார். 


நிகழ்ச்சியில் உறைவிட மருத்துவர் மருத்துவர் அகத்தியன், என் எச் எம்  நோடல் ஆபீசர் மருத்துவர் கார்த்திக், சிவகிரி மருத்துவர் இசக்கி, கண் உதவியாளர்  ராமசுப்பிரமணி யன் மற்றும் செவிலியர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

நிருபர் நெல்லை டுடே

https://www.nellai.today