தென்காசி,  டிச.1:

செங்கோட்டையை அடுத்துள்ள தெற்குமேட்டில் அரசமரம் சேவை அமைப்பின் சார்பில் புற்று நோய் விழிப்புணா்வு மற்றும் கண்டறிதல் முகாம். செங்கோட்டையை அடுத்துள்ள தெற்குமேடு காளியம்மன் கோவில் வளாகத்தில் வைத்து நெல்லை கேன்சா் கேர் சென்டா் மற்றும் விசுவநாதபுரம் அரசமரம் கண்குறைபாடு கண் பார்வையற்றோர்க்கான சேவை அமைப்பின் சார்பில் இலவச புற்று நோய்க்கான விழிப்புணா்வு மற்றும் கண்டறிதல் முகாம் நடைபெற்றது.

இந்த முகாமிற்கு தெற்குமேடு ஊராட்சி மன்ற தலைவா் செல்வி அனுகண்ணன் தலைமை தாங்கினார். துணைத்தலைவா் முருகராஜ், உறுப்பினா்கள் கோபிநாத், முருகையா, கணபதி, வசந்தி, பூமாரி, சமூக ஆர்வலா் தங்கராஜ் ஆகியோர் முன்னிலைவகித்தனா். அரசமரம் சேவை அமைப்பின் நிறுவனா் மன்சூர்  வரவேற்று பேசினார். 

அதனைதொடா்ந்து நெல்லை கேன்சா் சென்டா் மருத்துவா் டாக்டா் சிந்தியாசரோஜா தலைமையில் பொதுமக்களுக்கு புற்றுநோய் அறிகுறி மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. 
இந்த நிகழ்ச்சியில் முகாம் ஒருங்கிணைப்பாளா் வனிதா, செவிலியா்கள் தங்கம்மாள், முத்துமாரி, முத்துராணி, ரூபாவதி, சமூக ஆர்வலா் வேல்முருகன் மற்றும் ஊராட்சி துாய்மை பணியாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். 
முடிவில் சேவை அமைப்பிள் மேலாளா் விஜயலெட்சுமி   நன்றி கூறினார். https://www.cancer.org

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today