தென்காசி, ஆக. 13:

வாக்காளர் பட்டியலில் இரட்டைப்பதிவு இருப்பதை நீக்கம் செய்ய விண்ணப்பிக்கலாம் என தென்காசி மாவட்ட  ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தரராஜ்  கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

தென்காசி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்கள் குடும்ப உறுப்பினர் பெயர், உறவினரின் பெயர், அல்லது தங்கள் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ள அதே பாகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர்களின் பெயரை, வெளியூருக்கு இடமாறுதல், இறப்பு, மற்றும் இரட்டைப்பதிவு ஆகிய காரணங்களுக்காக வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்வதற்கு nvsp.in என்ற இணைய தளத்தில் நேரடியாகவோ அல்லது பொது சேவை மையம் மூலமாக விண்ணப்பித்து பயன்பெறலாம், அல்லது படிவம்-7 ஐ  www.tenkasi.nic.in/forms/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பங்களை தங்களது வட்டாட்சியர் அலுவலகத்தில் நேரடியாகவோ, தபால் மூலமாகவோ சமர்ப்பிக்கலாம்.

பெயர் நீக்கம் செய்வதற்கு சான்றாக இடமாற்றத்தினால் பெயர்நீக்கம் செய்பவர்கள் முகவரி மாற்றத்திற்கான காரணம், தற்போதைய முகவரிக்கான ஆவணங்கள் மற்றும் இறப்பினால் பெயர் நீக்கம் செய்வதற்கு சம்பந்தபட்ட நபரின் இறப்பு சான்று ஆகியவற்றை சமர்ப்பிக்கலாம்.

இது தொடர்பான சந்தேகங்கள் ஏதும் இருப்பின் 1950 என்ற தொலைபேசி எண்ணில் அலுவலக வேலை நாட்களில், அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தர ராஜ் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்;.

நிருபர் நெல்லை டுடே

https://www.nellai.today