தென்காசி, நவ. 18:
தென்காசி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கம் மற்றும் திருத்தம் செய்ய சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படி 01.01.2022 ஆம் நாளினை தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத்திருத்தம், 2022-க்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
இதற்கான வரைவு வாக்காளர் பட்டியல் 01.11.2021 அன்று வெளியிடப்பட்டு, திருத்தங்கள் மேற்கொள்வதற்கு படிவங்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு வருகிறது. தென்காசி மாவட்ட பொதுமக்கள் 20.11.2021, 21.11.2021, 27.11.2021 மற்றும் 28.11.2021 அன்று சிறப்பு முகாம்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், மற்றும் திருத்தம் தொடர்பான மனுக்களை அளித்து பயனடையும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் www.nvsp.in என்ற இணையதளம் மூலமாகவும், வோட்டர் கெல்ப்லைன் அப் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம், படிவங்களை www.tenkasi.nic.in/form என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பங்களை தங்களது வட்டாட்சியர் அலுவலகத்தில் நேரடியாகவோ, தபால் மூலமாகவோ சமர்ப்பிக்கலாம். இது தொடர்பான சந்தேகங்கள் ஏதும் இருப்பின் 1950 என்ற தொலைபேசி எண்ணில் அலுவலக வேலை நாட்களில், அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம். www.tenkasi.nic.in
செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today