தென்காசி,  நவ.19:

தென்காசியில் கோரிக்கைகளை வலியுறுத்தி வணிக வரி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். வணிக வரி பணியாளர்களை ஒட்டுமொத்தமாக கோட்டம் விட்டு வேறு கோட்டத்துக்கு பணியிட மாறுதல் செய்ததை கண்டித்து தென்காசி யானைப்பாலம் அருகிலுள்ள வணிக வரி அலுவலகம் முன்பு  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

தமிழ்நாடு வணிக வரி பணியாளர் சங்க மாவட்ட தலைவர் சாலமன் லெனின் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் அய்யப்பன் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்க மாவட்ட இணை செயலாளர் மாடசாமி, தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலர் சங்கத்தின் நெல்லை மண்டல செயலாளர் சேகர், தமிழ்நாடு அரசு கூட்டுறவு துறை ஊழியர் சங்க தென்காசி மாவட்ட பொறுப்பாளர் ராஜ், 

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்க தென்காசி வட்ட தலைவர் கண்ணன் ஆகியோர் பேசினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் துரைசிங் நிறைவுரையாற்றினார். முடிவில் வணிக வரி பணியாளர் சங்க தென்காசி வட்டக்கிளை தலைவர் லட்சுமணன் நன்றி கூறினார். https://www.incometaxindia.gov.in

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today