நெல்லை,  சூலை 29:

நெல்லை ஸ்ரீபுரம் பிஎஸ் என்எல் அலுவலகத்தில்   பிஎஸ்என்எல் அனைத்து ஊழியர்கள் சங்கம் சார்பில்  ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சூசை அந்தோணி தலைமை தாங்கினார். 

பொறியாளர் சங்க மாவட்ட செயலாளர் விஜய மணிகண்டராஜ் முன்னிலை வகித்தார். மத்திய அமைப்பு செயலாளர் ரிச்சர்ட் பால் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்து பேசினார். 

பிஎஸ்என்எல் அதிகாரிகள் சங்க மாநில அமைப்புச் செயலாளர் விஜயகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார்.

பிஎஸ்என்எல் செல்போன் கோபுரங்களை தனியாருக்கு விற்கும் முயற்சியை கைவிட வேண்டும்.  பிஎஸ்என்எல் 5 ஜி சேவையை உடனே தொடங்க வேண்டும். மாத இறுதியில் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும். 

ஓய்வூதிய பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதம் நடந்தது. 

நிருபர் நெல்லை டுடே

https://www.nellai.today