தென்காசி,  அக் .30:

தென்காசியில்  மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையும்,  திருவனந்தபுரம் கிம்ஸ், மருத்துவமனையும் இணைந்து நடத்திய மார்பகபுற்று நோய்க் கருத்தரங்கம் மற்றும் மார்பகபுற்று நோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது.

குற்றாலம் சென்ட்ரல் ரோட்டரி கிளப் சார்பில் தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில்  மார்பக புற்று நோய் கருத்தரங்கம் மற்றும் மார்பக புற்றுநோய் கண்டறிதல் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

 இந்த நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் இரா.ஜெஸ்லின் தலைமை தாங்கினார். தென்காசி மீரான் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் அப்துல்அஜீஸ் வரவேற்றுப் பேசினார்.

இந்த கருத்தரங்கம் மற்றும் சிறப்பு முகாமில் தென்காசி மாவட்ட சுகாதார நலப்பணியாளர்கள் இணை இயக்குநர் மருத்துவர் வெங்கட ரங்கன் தலைமை  விருந்தினராக கலந்துகொண்டார். மேலும்முன்னாள் 3212 மாவட்ட ரோட்டரி ஆளுநர் டாக்டர் சேக்சலீம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்

இந்த நிகழ்ச்சியில் திருவனந்தபுரம் கிம்ஸ் மருத்துவமனை புற்று நோய் மார்பக சிகிச்சை நிபுணர் மருத்துவர்  நிஷா மார்பக புற்று நோயின் அறிகுறிகள், மருத்துவ வழி முறைகள் பற்றி மருத்துவர்களுக்கு எடுத்து கூறினார். அதனைத் தொடர்ந்து  30 நபர்களுக்கு சிறப்பு மார்பக ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது.

இந்த நிகழ்சியில் மருத்துவர்கள் அகத்தியன் , கீதா, லதா, கார்த்திக் புனிதவதி, தமிழருவி , விஜயகுமார், ராஜலட்சுமி, முத்துக்குமாரசாமி, முகமது இப்ராஹிம், கீர்த்தி, தேவி உத்தமி, தயாளன், ரோட்டரி சங்க நிர்வாகிகள்  மாரிமுத்து சாமி சிவகுமார், கர்னல் சம்சு, பிரதீப் ,காந்திமதிநாதன், ராஜ குலசேகேர பாண்டியன்  மருத்துவமனை செவிலியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் குற்றாலம் ரோட்டரி சங்க நிர்வாகி காந்திமதிநாதன் நன்றி கூறினார்.

படம் விளக்கம்:

தென்காசியில் மார்பகப் புற்றுநோய் கருத்தரங்கம்  மற்றும் புற்றுநோய் கண்டறிதல் முகாம் நடைபெற்ற போது எடுத்தபடம். https://www.tenkasi.nic.in , https://www.nnp.gov.in 

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today