தென்காசி, ஆக 20:

தென்காசி மாவட்டத்தில் 6  நபர்களுக்கு கரும்பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது இவர்களின் குடும்ப உறுப்பினர்களை கண்காணிக்க சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது இந்நிலையில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த 6 நபர்களுக்கு கரும்பூஞ்சை நோய் பாதிக்கப்பட்டு அவர்கள் வெளி மாவட்டங்களில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

இவர்களில் 4 பேர் தென்காசி பகுதியைச் சார்ந்தவர்கள் என்றும் மேலும் 2 பேர் தென்காசி மாவட்டத்தின் பிற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. இதுதொடர்பான தகவல் சம்பந்தப்பட்ட சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சித்துறை அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டு கரும்பூஞ்சை நோய்  பாதிக்கப் பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களை கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட  நபர்களின் குடும்பத்தினரை சுகாதாரத் துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். 

நிருபர் நெல்லை டுடே

https://www.nellai.today