தென்காசி,  அக்.22:

தென்காசி மாவட்டம் ஆய்குடியில்  கிங்பீடி கம்பெனி பீடி தொழிலாளர்கள் சிஐடியு கிளை கூட்டம் சங்க தலைவர் முத்துலெட்சுமி தலைமையில் நடைபெற்றது.
பீடி தொழிலாளர்கள் சங்க மாவட்ட பொதுச்செயலாளர் வேல்முருகன் கலந்து கொண்டு பீடி தொழிலாளர்கள் பிரச்னைகளும் அதற்கான தீர்வுகளும் சம்மந்தமாக பேசினார்.

கூட்டத்தில் தென்காசி வட்டார பீடி சங்கதலைவர் ஆறுமுகம், வட்டார துணைதலைவர் கருப்பையா மற்றும் 30க்கும் மேற்பட்ட பீடி தொழிலாளர்கள்  கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: கிங் பீடி கம்பெனியில் பணிபுரியும் பீடி தொழிலாளர்களுக்கு   2020 – 2021,  ஆண்டுகளுக்கான லீவு சம்பளம்,  போனஸ் உடனாடியாக கிங் பீடி கம்பெனி நிர்வாகம் வழங்கிட கோரியும், தமிழக அரசும்,  தொழிலாளர்துறை அதிகாரிகளும் நடவடிக்கை எடுத்திட வலியூறுத்தி அக்டோபர் 26 செவ்வாய்கிழமை  காலை 10 மணிக்கு ஆய்க்குடி கிங்பீடி பீடி கம்பெனி முன்பு கண்டன போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது .

பீடி தொழிலாளர்களுக்கு தரமற்ற பீடி இலை சண்டு , நெரிச்சல் கருப்பு இலை வழங்கி தரமான பீடி கிங்பீடி நிர்வாகம் கேட்பதால் விலைக்கு இலை வாங்கி பீடி சுற்றி கொடுப்பதால் தினசரி கூலி இழப்பு ரூ35 முதல் ரூ50 வரை  ஏற்படுகிறது.
எனவே தரமான இலை 1000 பீடிக்கு 700 கிராம் வழங்கிட தமிழக அரசு  நடவடிக்கை எடுத்திடவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

படவிளக்கம்:

ஆய்குடியில் பீடி தொழிலாளர்கள்  கூட்டம் நடைபெற்றபோது எடுத்த படம். https://www.tenkasi.nic.in

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today