தென்காசி, சூலை 22:


பக்ரீத் பண்டிகை  கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு நெல்லை மேலப்பாளையம் தவ்ஹீத் ஜமாத் பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. 
தவ்ஹீத் ஜமாத் மாநில தலைவர் சம்சுல்கா ரகுமானி தொழுகை நடத்தி சிறப்புரையாற்றினார். இதில் தவ்ஹீத் ஜமாத் மாநில செயலாளர்கள் யூசுப் அலி, செய்யது அலி, மாவட்ட தலைவர் மஸ்வூத் உஸ்மானி, மாவட்ட செயலாளர் அன்சாரி உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலப்பாளையம் அத்தியூத்து தெருவில் உள்ள பெரிய குத்துவா பள்ளிவாசலில் நடந்த சிறப்பு தொழுகையில் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., முன்னாள் மண்டல தலைவர் ஹைதர் அலி, முகமது அலி உள்பட ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.

இதேபோன்று மேலப்பாளையம் கரீம் நகர் மஸ்ஜித்ஹுதா பள்ளிவாசலில் மீரான் முகைதீன் அன்வாரி சிறப்பு தொழுகை நடத்தினார். தலைமை இமாம் சாகுல் ஹமீது உஸ்மானி மார்க்க உரையாற்றினார்.

எஸ்.டிபி.ஐ. கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக், மாவட்ட தலைவர் எஸ்.எஸ்.எ.கரிம் என்ற கனி, மஸ்ஜித்ஹுதா செயலாளர் முஸ்தபா ஜாபர்அலி, பொருளாளர் ஜவஹர் உள்பட ஏராளமானவர்கள் சமூக இடைவெளியுடன் முக கவசம் அணிந்து பங்கேற்றனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, நெல்லையில் திடல்களில் தொழுகை நடத்த அனுமதி வழங்கப்படவில்லை. எனவே பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் தொழுகை நடத்தினர்.நெல்லை டவுன் முகம்மது அலி தெருவில் நடைபெற்ற பெருநாள் தொழுகையில் த.மு.மு.க. (ஹைதர் அணி) மாவட்ட பொருளாளர் டவுன்  ஜாபர் கலந்து கொண்டார். எம்.என்.பி பள்ளிவாசலில் நடந்த தொழுகையில் மாநில துணை பொதுச்செயலாளர் உஸ்மான் கான் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல ஜாமியா பள்ளிவாசல், வி.மா. பள்ளிவாசல், நயினார் குளம் பள்ளிவாசல் உள்ளிட்ட பல்வேறு பள்ளிவாசல்களிலும் பக்ரீத் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடைபெற்றது. 

சிலர் தங்களது வீடுகளிலும் தொழுகை நடத்தினர். தொழுகை முடிந்ததும் முஸ்லிம்கள் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி பக்ரீத் பண்டிகை வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர். 
மேலும் ஏழைகளுக்கு அரிசி, இறைச்சி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினர். பல்வேறு இடங்களிலும் ஆடு, மாடு போன்றவற்றின் இறைச்சியை குர்பானியாக வழங்கினர். பிரியாணி போன்ற உணவு பொட்டலங்களும் வழங்கினர்.
நெல்லை மாவட்டம் முழுவதும் பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை நடத்தி, நலத்திட்ட உதவிகள் வழங்கி  பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது. 

நிருபர் நெல்லை டுடே

https://www.nellai.today