தென்காசி, நவ .29:
தென்காசியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கான விசாரணை பிரிவால் விழிப்புணர்வு செய்யப்பட்டது. தென்காசி மாவட்டம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றத்தை அடுத்து விசாரணை செய்து உடனடி நடவடிக்கை எடுக்கும் பொருட்டு தென்காசி மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கான விசாரணை பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜேந்திரன் தலைமையில், துணைக் காவல் கண்காணிப்பாளர் சூரிய மூர்த்தி, காவல் ஆய்வாளர் அன்னலட்சுமி மற்றும் சார்பு ஆய்வாளர் ரத்தினபால் சாந்தி ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கான விசாரணைப் பிரிவினர் தென்காசி சிவா மண்டபத்தில் வைத்து பாலியல் ரீதியான பிரச்சினைகள் குறித்தும், அதனால் அவர்கள் சந்திக்கும் பாதிப்புகள் குறித்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஒரு பெண் மற்றொரு பெண்கள் பாலியல் ரீதியாக உடலுறவு வைத்துக் கொள்ளுதல், இரு ஆண்கள் பாலியல் ரீதியாக உடலுறவு வைத்துக் கொள்ளுதல் என்பது இரு சட்டப்பூர்வ வயதை அடைந்த ஒரே இனத்தை சேர்ந்தவர்கள் பாலுறவு வைத்துக்கொள்வது குற்றமாகாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இருப்பினும் இயற்கைக்கு மாறாக விலங்குகளுடன் உடலுறவு கொள்பவர்களுக்கு இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377 ன் படி தண்டனைக் குரிய செயல் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும் பாலியல் ரீதியாக யாரேனும் பிரச்சனை செய்தால் தயங்காமல் பெண்களுக்கான உதவி மையம் எண் – 181 ஐ அழைக்கவும் எனவும் உங்கள் பாதுகாப்பிற்காக அரசு ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் மடிக்கணினி மற்றும் இருசக்கர வாகனம் வழங்கப்பட்டுள்ளது எனவும் புகார் அளித்தவுடன் விரைந்து வந்து விசாரணை செய்து தீர்வு காணும் வகையில் செயல்பட்டு வருகிறது எனவும் இந்நிகழ்ச்சியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தென்காசி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மணிமாறன், சமூக மாற்றத்திற்கான சமூக ஆர்வலர்கள் ஆறுமுகம், மாரியப்பன், காளியப்பன், சுந்தரகனி, விஜயலட்சுமி மற்றும் காவல் அதிகாரிகள், திருநங்கைகள் கலந்து கொண்டனர். https://www.tnsocialwelfare.org