தென்காசி,  அக்.20:

தென்காசி அருகே உள்ள ஆயிரப்பேரியில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது எப்படி என்பது குறித்து தீயணைப்பு வீரர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். 

தென்காசி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் கவிதா உத்தரவின்படி

தென்காசி அருகே உள்ள ஆயிரப்பேரியில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செயல்முறை விளக்கம் நடைபெற்றது.

தென்காசி நிலைய அலுவலர் (பொறுப்பு) கணேசன் தலைமையில் சிறப்பு நிலை அலுவலர் செல்வன் மற்றும் வீரர்கள் செயல்முறை விளக்கம் செய்து காட்டினர். 

வெள்ளத்தில் சிக்கியவர்களை வீட்டு உபயோக பொருட்களை வைத்து எவ்வாறு பாதுகாப்பாகமீட்பது? மற்றும் வெள்ள அபாயங்களில் முன்னெச்சரிக்கையாக செய்யவேண்டியது, பேரிடர் மீட்பு பணிகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதில் ஆயிரப்பேரி மற்றும் பாட்டப்பத்து கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

படவிளக்கம்:

தென்காசி அருகே உள்ள ஆயிரப்பேரியில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது எப்படி என்பது குறித்து தீயணைப்பு வீரர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். https://www.tnfrs.tn.gov.in

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today