தென்காசி, ஆக. 8:
தென்காசி மாவட்டத்தில் 100 சதம் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் கோபால சுந்தரராஜ் விருது வழங்கினார்.
தென்காசி மாவட்டத்தில் தமிழக முதல்வர் ஆணையின்படி கொரோனா தடுப்பு விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. விழிப்புணர்வு வார இறுதி நாளன்று 100 சதவிகிதம் தடுப்பூசி போட்டுக்கொண்ட கிராமம் மற்றும் வார்டுகளுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் தென்காசி வட்டாரத்தில் உள்ள அழகப்பபுரம் கிராமம்; மற்றும் குருவிகுளம் வட்டாரத்தில் உள்ள திருவேங்கடம் நகர பஞ்சாயத்திற்குட்பட்ட வார்டு 8,9,10ல் உள்ள நபர்களும் 100 சதவிகிதம் தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கு சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் மருத்துவ துறையினருக்கு பாராட்டு சான்றிதழ் மாவட்ட ஆட்சித்தலைவர் ச. கோபால சுந்தர ராஜ்; வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனிநாடார் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஈ.ராஜா முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை சரவணன், மற்றும் உதவி திட்டமேலாளர்(சுகாதாரம்) மரு.கீர்த்தி மற்றும்; பலர் கலந்து கொண்டனர்.
நிருபர் நெல்லை டுடே