தென்காசி,  டிச.20:

தமிழக அரசு ஒவ்வொரு கல்வியாண்டிலும் சிறப்பாக செயல்படும் பள்ளிகளை தேர்வு செய்து அவர்களின் கல்விப் பணியினை பாராட்டும் வகையில் “சிறந்த பள்ளிக்கான விருது” வழங்கி கௌரவிக்கின்றது. 

அதன் அடிப்படையில் தென்காசி மாவட்டத்தில் 2019-2020ம் கல்வியாண்டில் சிறப்பாக செயல்பட்ட 3 பள்ளிகளுக்கு  மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆ.கபீர்  விருது வழங்கி பாராட்டினார். 

திருச்சிற்றம்பலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, லெட்சுமியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் பூலாங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய மூன்று பள்ளிகளுக்கும் விருது வழங்கப்பட்டது. மூன்று பள்ளி தலைமை ஆசிரியர்களும் மற்றும் உதவி ஆசிரியர்களும் விழாவில் கலந்து கொண்டனர். 

விருதுபெற்ற பள்ளி தலைமை ஆசிரியர்களை தென்காசி மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயப்பிரகாஷ் ராஜன், வட்டாரக் கல்வி அலுவலர் மாரியப்பன், முதன்மைக் கல்வி அலுவலக நேர்முக உதவியாளர்கள் சீனிவாசன், மீரான் மற்றும் அலுவலக பணியாளர் எட்வின் ஆகியோர் வாழ்த்தினர். விழா ஏற்பாடுகளை முதன்மை கல்வி அலுவலக பணியாளர்கள்  செய்து இருந்தனர். https://www.tnschools.tn.gov.in

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today