தென்காசி, ஆக.4:
தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் துறையின் கீழ் இயங்கும் தேசிய பசுமை படையும் , தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இணைய வழியாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு போட்டிகளை நடத்தியது.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா தென்காசி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் வைத்து நடைபெற்றது.
பள்ளி தலைமை ஆசிரியர் அன்புமணி தலைமை தாங்கினார். நல்லாசிரியர் மாடசாமி, வட்டார கல்வி அலுவலர் மாரியப்பன் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர் விஜயலக்ஷ்மி வரவேற்றார்.
மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கருப்புசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டி களில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு இணைய போட்டியில் வெற்றிபெற்ற தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி அஸ்வினி பாலாவிற்கு மாவட்ட முதன்மைகல்வி அலுவலர் கருப்புசாமி பரிசு வழங்கி பாராட்டினார்.
திருநெல்வேலி கல் வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் செல்வின் சாமுவேல் எரிபொருள் சிக்கனம் குறித்த விழிப்புணர்வு கருத்துரை வழங்கி அதிலிருந்து வினாடி வினா நடத்தி பரிசு வழங்கினார்.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய கருத்தாளர் முனைவர் ரெங்கநாதன் , தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாவட்ட செயலாளர் சுரேஷ் குமார், தங்கபாண்டியன், திருநெல்வேலி அகில இந்திய வானொலி நிலைய நிகழ்ச்சி தொகுப்பாளர் முனைவர் சந்திர புஷ்பா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
தலைமை ஆசிரியரும் சேரன்மகாதேவி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான ஜோசப் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை மாதவி , சங்கரன் செய்திருந்தனர்.
நிருபர் நெல்லை டுடே