தென்காசி , அக்.18:


செங்கோட்டை அரசு பொதுநுாலகம் மற்றும் ரோட்டரி கிளப் சார்பில் பரிசளிப்பு விழா நடந்தது.  

செங்கோட்டை அரசு பொதுநுாலக கட்டிடத்தில் வைத்து வாசகர் வட்டம் செங்கோட்டை ரோட்டரி கிளப் சார்பில் காந்திஜெயந்தி விழாவை முன்னிட்டு பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியா்களுக்கான ஓவிய போட்டி, கட்டுரைபோட்டி, கவிதை போட்டிகள் நடத்தப்பட்டது. 


அதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனா். அதில் சுமார் 450 தேர்வு செய்யப்பட்டனா். 
போட்டில்  வெற்றி பெற்ற மற்றும் கலந்து கொண்ட மாணவா்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு வாசகர் வட்டத் தலைவா் பொறியாளா் இராமகிருஷ்ணன் தலைமைதாங்கினார். குற்றாலம் ரோட்டரி கிளப் தலைவா் பிரகாஷ், செங்கோட்டை ரோட்டரி கிளப் தலைவா் ஷேக்ராஜா ஆகியோர் முன்னிலைவகித்தனா். நுாலகா் இராமசாமி  வரவேற்று பேசினார். 


 போட்டிகளில் வெற்றி பெற்ற கலந்து கொண்ட பள்ளி, கல்லுாரி மாணவா்களுக்கு சிறப்பு விருந்தினா் இராஜகோபால் பரிசுகளை வழங்கி வாழ்த்தி பேசினார். பின்னா்  குற்றாலம் ரோட்டரி சங்க செயலாளா் கார்த்திக்குமார், செங்கோட்டை ரோட்டரி கிளப் முன்னாள் தலைவா் இராமகிருஷ்ணன் எஸ்எஸ்ஏ.திட்ட மேற்பார்வையாளா் இராஜேந்திரன், நுாலக போட்டித் தேர்வு பொறுப்பாளா் விழுதுகள்சேகா் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினா். 


நிகழ்ச்சியில் போட்டி தேர்வு நடுவா் குழு சார்பில் குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லுாரி பேராசிரியா் முனைவர் மகேஸ்வரி, முனைவர் அல்தாஜ்பேகம், நுாலக ஓவிய பயிற்சி பொறுப்பாளா் முருகையா, ஓவிய ஆசிரியா் ஜெய்சிங் மற்றும் மாணவ, மாணவியா், பெற்றோர் உள்பட பலா் கலந்து கொண்டனா். முடிவில் வாசகா் வட்ட பொருளாளா் தண்டமிழ்தாசன் பா.சுதாகர் நன்றி கூறினார். https://www.tn.gov.in

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today