தென்காசி, டிச 3:
தென்காசி மாவட்ட உரிமைக்குரல் ஓட்டுநர் தொழிற்சங்கம் சார்பில் தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலரிடம் கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் சொந்தபயன் பாட்டு வாகனங்களை வாடகைக்கு இயக்குவதை தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
தென்காசி மாவட்ட செயலாளர் உரிமைக்குரல் ஓட்டுநர் தொழிற்சங்க
தலைவர் எஸ்.உதயசூரியன் தலைமையில் சங்கத்தின் நிர்வாகிகள் நேற்று
தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந்த் மற்றும் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் விஜய் ஆகியோரை சந்தித்து கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது.
தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து வட்டங்களிலும் ஒன்றியங்களிலும் சுற்றுலா கார் வைத்து தொழில் செய்து வருகிறோம். அரசுக்கு முறையாக செலுத்தக்கூடிய தகுதிச் சான்று, அனுமதி, காப்பீடு மாசு கட்டுப்பாட்டுக்கான உமிழ்வு சான்றிதழ், பிரதிபலிக்கும் ஸ்டிக்கர், உரிமம், மாநிலங்களுக்கு இடையேயான அனுமதி இவற்றுக்கான தொகைகளை முறையாக அரசுக்குச் செலுத்தியும் அரசின் மோட்டார் வாகன சட்ட திட்டங்களுக்கு உட்பட்டும் தொழில் செய்து வருகிறோம்.
தென்காசி மாவட்ட சுற்றுலா வாகன உரிமையாளர்கள் தமிழக அரசிற்கு பெரும் வருமானம் ஈட்டி கொடுப்பதோடு இன்றுவரை முழுமையாக ஆதரவும் கொடுத்து வருகிறோம். இதனைத் தொடர்ந்து தென்காசி மாவட்டங்களில் சுற்றுலா வாகன தொழிலை அடியோடு ஒழிக்கும் விதமாகவும் எங்களது வாழ்வாதாரத்தின் குரல்வளையை நெறிக்கும் விதமாகவும் ஆயிரக்கணக்கான சொந்த பயன்பாட்டு வாகனங்களை இந்திய மோட்டார் வாகன சட்ட விதிகளுக்கு புறம்பாக, கள்ளத்தனமாக வாடகைக்கு விட்டும் வாடகைக்கு ஓட்டியும் தமிழக அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருமான இழப்பு ஏற்படும் விதமாக கள்ளத்தொழில் செய்து வருகிறார்கள்.
ஆனால் இன்று வரை அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. எங்களுக்கான எந்த தீர்வும் கிடைக்க வில்லை. கடந்த 4. வருடங்களாக தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான வாடகை உரிமை வாகனங்களை சரண்டர் செய்து சொந்த பயன்பாடு வாகனங்களாக மாற்றி கள்ளத்தனமாக வாடகைக்கு ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் அரசுக்கான வருமானம் பெருமளவு நஷ்டம் ஏற்படுவதோடு சமூக குற்றங்கள் அதிக அளவில் நடப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளது. அங்கொன்றும் இங்கொன்றுமாக வாடகைக்கு ஓடும் சொந்தபயன்பாட்டு வாகனங்களை பிடித்துக் கொடுத்தால் அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கிறார்கள்.
இதனாலேயே சொந்தபயன்பாட்டு வாகனம் வைத்து வாடகைக்கு ஓட்டுபவர்களுக்கும். சுற்றுலா வாகனம் வைத்து தொழில் செய்பவர்களுக்கும். கைகலப்பு ஏற்பட்டு எங்களது வாகனங்களை சேதப்படுத்தியதால் காவல் நிலையத்தில் பல புகார் மனுக்களும் கொடுக்கப்பட்டது. இதன் காரணமாகவே தென்காசி மாவட்ட சுற்றுலா வாகன உரிமையாளர்கள் தங்களது வாகனங்களுக்கு வாடகை இல்லாமலும்.
வாகனத்திற்கு வாங்கிய கடனை கட்ட முடியாமலும். குடும்பத்தையும் கவனிக்க முடியாமலும். மனதளவில் பாதிக்கப்பட்டு மன உளைச்சல் ஏற்பட்டு. பல பேர் தற்கொலை செய்துள்ளார்கள். இதன் காரணமாக அந்த குடும்பத்தில் உள்ளவர்கள் எந்த ஆதரவும் இல்லாமல் நிர்க்கதியாய் உள்ளார்கள்.
எனவே வரக்கூடிய காலங்களில் இதுபோன்று இன்னும் பல சுற்றுலா வாகன உரிமையாளர்கள் தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். எங்களது தொழிலையும் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தாங்கள் எங்களுக்கு உதவ வேண்டும் எனவும்.
மேலும் சொந்தபயன்பாட்டு வாகனங்களை வாடகைக்கு இயக்காமல் தடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம் என்பதையும் இதற்கு தீர்வு தான் என்ன என்பதையும் தங்களிடம் கோரிக்கையாக முழு நம்பிக்கையுடன் பணிவுடனும் உங்கள் முன் வைக்கிறோம். என்று அவர்கள் அந்த கோரிக்கை தெரிவித்துள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட உரிமைக்குரல் ஓட்டுநர் தொழிற்சங்க மாவட்ட இணைச்செயலாளர் முருகையா, மாவட்ட துணைச் செயலாளர் எம்கேஎஸ்.மணிகண்டன் அசங்க ஒருங்கிணைப்பாளர் அருணாசலம், மற்றும் சங்க நிர்வாகிகள் எஸ்.மணிகண்டன் வி.பழனி, சண்முக வேல், முத்தையா,சரத்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். https://www.tnsta.tn.gov.in
செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today