தென்காசி, அக்.30:

கடையம் சார் பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று  திடீர்  சோதனை நடத்தினர். இதில் ரூ.1 லட்சத்து 39 ஆயிரம் சிக்கியது.

தென்காசி மாவட்டம் கடையம் யூனியனில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் நேற்று மாலை லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு மெக்லரின் எஸ்கால், இன்ஸ்பெக்டர் ராபின்சன்,சப்இன்ஸ்பெக்டர் மாரியப்பன் உள்பட 7 பேர் அடங்கிய போலீசர் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.

மாலை 6 மணி அளவில் தொடங்கிய இந்த சோதனை இரவு வரை வெகுநேரம் நீடித்தது. இந்த சோதனையில் கணக்கில் காட்டப்படாமல் இருந்த ரூ.1 லட்சத்து 39 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கடையம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய திடீர் சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. https://www.tenkasi.nic.in, https://www.dvac.tn.gov.in

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today