தென்காசி, சூன் 30-தென்காசி ஆட்சித்தலைவர் உத்தரவுபடி, சங்கரன்கோவில் பகுதியில் தொடர் குற்ற செயல்களில்  ஈடுபட்டவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் நகர் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதிகளில் சங்கரன்கோவில் நகர் ,நெடுங்குளம் வடக்கு காலனியைச் சேர்ந்த சின்னகாளிமுத்து என்பவரின் மகன் பவுன்ராஜ் (எ) ஆறுமுகம்  கொலைமுயற்சி போன்ற தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார்.
 இந்நபரை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சங்கரன்கோவில் நகர் காவல் ஆய்வாளர் ராஜாவுக்கு தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ்  அறிவுறுத்தினார்.
இதன் பேரில்,பவுன்ராஜ் (எ) ஆறுமுகத்தை   குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  கிருஷ்ணராஜ் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித்தலைவர் கோபாலா சுந்தரராஜ்  உத்தரவின் பேரில், சின்னகாளிமுத்து என்பவரின் மகன் பவுன்ராஜ் (எ) ஆறுமுகம் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
இதற்கான உத்தரவு ஆணையை பாளையங்கோட்டை மத்திய சிறையில் காவல் ஆய்வாளர் ராஜா  சமர்பித்தார். 

நிருபர் நெல்லை டுடே