தென்காசி, அக். 28:

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பாக தென்காசி மாவட்ட அளவில் தென்காசியில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 02.11.2021 அன்று காலை 9 மணி முதல் தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது. 

மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழில் நிறுவனங்கள் பங்கேற்கும் இந்த முகாம் மூலம் சுமார் 200 க்கும் மேற்பட்ட தொழிற்பழகுநர் இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் ஐ.டி.ஐ தேர்ச்சிப் பெற்று தற்போதுவரை தொழிற்பழகுநர் பயிற்சி பெறாத பயிற்சியாளர்களும், தொழிற்பழகுநர் சட்டம் 1961-ன் அடிப்படையில்; மத்திய அரசால் செயல்படுத்தப்படும் தொழிற்பழகுநர் திட்டத்தின் கீழ் தொழிற்பயிற்சி முடித்த பயிற்சியாளர்களுக்கு, தொழிற்பழகுநர் பயிற்சி வழங்க விரும்பும் தொழில் நிறுவனங்கள் கலந்து கொள்ளலாம்.

இதில் பங்கேற்று தேர்வு பெறும் ஒரு வருட தொழிற்பிரிவுகளில் தொழிற் பயிற்சியினை நிறைவு செய்த பயிற்சியாளர்களுக்கு குறைந்த பட்சம் ரூ.7700/- மற்றும்  இரு வருட தொழிற் பிரிவுகளில் தொழிற்பயிற்சியினை நிறைவுசெய்த பயிற்சியாளர்களுக்கு ரூ.8050/-  எனவும் தொழிற்பழகுநர் பயிற்சிகாலத்தில் உதவித்தொகையாக வழங்கப்படும். 

தொழிற்பழகுநர் பயிற்சியினை வெற்றிகரமாக நிறைவு செய்யும் தொழிற்பழகுநர்களுக்கு உலக அளவில் அங்கீகாரம் பெற்ற தேசிய தொழிற்பழகுநர் சான்று வழங்கப்படும். இச்சான்று பெற்றவர்கள் பொதுத்துறை மற்றும் பெரிய தொழில் நிறுவன வேலைவாய்ப்புகளில், ஐ.டி.ஐ. முடித்து தேசிய தொழிற்சான்று பெற்றவரைவிட முன்னுரிமை பெற்றவராக கருதப்படுவர். 

தொழிற்பழகுநர் சட்டம் 1961-ன் படி குறைந்தபட்சம் 30 பணியாளர்களுடன் இயங்கும் அரசு மற்றும் தனியார் தொழில் நிறுவனங்கள் தொழில் பழகுநர் இணையதளத்தில் தங்கள் விவரங்களை பதிவு செய்து தொழில் பழகுநர் திட்டத்தினை செயல்படுத்துவது கட்டாயம் என்பதால், அரசின் சட்ட நடவடிக்கைகளை தவிர்க்கும் வகையில் மேற்படி குறைந்தபட்ச பணியாளர்களுடன் இயங்கும் தொழில் நிறுவனங்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி தொழில் பழகுநர் திட்டத்தில் இணைந்து கொள்ளலாம்.

குறைந்தபட்சம் 4 முதல் 29 பணியாளர்களுடன் இயங்கும் தொழில் நிறுவனங்கள் தங்கள் முழு விருப்பத்தின் பேரில் இத்திட்டத்தில் இணைந்து கொள்ளலாம்.
இத்திட்டத்தில் இணைவதன் மூலம் திறன் வாய்ந்த மனித வளம்; தொழில் நிறுவனங்களுக்கு கிடைக்க பெறுவதுடன், ஒரு தொழிற்பழகுநருக்கு வழங்கப்படும் மாதாந்திர ஊக்கத் தொகையில் 25மூ  தொகை அல்லது ரூ.1500 வீதம் அனைத்து தொழிற் பழகுநர்களுக்கு ஊக்கத்தொகை கணக்கிடப்பட்டு மத்திய அரசால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு மீளவழங்கப்படும்.

எனவே ஐ.டி.ஐ., முடித்த பயிற்சியாளர்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி பயன் அடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றது.
மேலும் விவரங்களுக்கு திருநெல்வேலி, பேட்டை, அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்திற்கு எதிரில் இயங்கும் மாவட்ட திறன்; பயிற்சி அலுவலகத்தை நேரிலோ அல்லது 04622-342432 ஃ 9499055790 என்ற தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம். https://www.tenkasi.nic.in 

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today