தென்காசி, நவ. 17:

பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்கான
தேசிய பெண் குழந்தை தின விருது -2021க்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்கு சிறப்பாக பங்காற்றும் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் தேசிய பெண் குழந்தை தினமான ஜனவரி 24 ல் மாநில அரசின் விருதுக்கான காசோலை ரூ.1,00,000/- மற்றும் பாராட்டு பத்திரம் வழங்கப்படவுள்ளது. தகுதிகள்:

5 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தை (31 டிசம்பர்-இன் படி) கீழ்கண்டவற்றில் வீர தீர செயல் புரிந்திருக்க வேண்டும்.
பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல்.
பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு.

பெண் குழந்தை திருமணத்தை தடுத்தல் மற்றும் தவிர்த்தல்.
வேறு ஏதாவது வகையில சிறப்பான  / தனித்துவமான சாதனை செய்திருத்தல்.
பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள் மூடநம்பிக்கைகள் ஆகியவற்றிற்கு தீர்வு காண்பதற்கு ஓவியங்கள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தியிருத்தல்.

ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்பது போன்ற செயல்களை பெண்களாலும் சாதிக்க முடியும் என்று சாதித்திருத்தல்.
மாநில அளவிலான தேர்வுக் குழுவின் கூர்ந்தாய்விற்கு பின்னரே இவ்விருதிற்கான உரிய நபர் தேர்ந்தெடுக்கப்படுவார்.

அவ்விருதிற்கு மேற்கண்ட தகுதிகளை உடைய 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளின் விவரங்களுடன், சம்பந்தப்பட்டவர்கள் 22.11.2021 ற்குள் மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், பி4/107 சுப்பிரமணியபுரம் தெரு, வ.உ.சி மைதானம் எதிரில், திருவனந்தபுரம் ரோடு, பாளையங்கோட்டை, திருநெல்வேலி மாவட்டம் -627002 என்ற முகவரிக்கு நேரில் வந்து கருத்துருக்கள் சமர்பிக்க வேண்டும் என்ற விவரம்; தெரிவிக்கப்படுகிறது. இத்தகவலை தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் கோபாலசுந்தரராஜ் தெரிவித்துள்ளார். https://www.tenkasi.nic.in

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today