தென்காசி,  சூலை 4-

மத்திய அரசின் 2020 ம் ஆண்டிற்கான டென்சிங் நார்கே தேசிய விருது பெற தகுதியுள்ள விளையாட்டு வீரர்கள் விண்ணப்பம் அளிக்கலாம் என்று தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ச.கோபால சுந்தர ராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- 

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் – தென்காசி பிரிவு மூலம்  இந்திய அரசின் 2020 ஆம் ஆண்டிற்கான டென்சிங் நார்கே தேசிய விருது  ஒவ்வொரு ஆண்டும் , நாட்டிற்கு பெருமை தேடித் தரும் சிறந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்றுநர்களுக்கு பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கி கௌரவித்து வருகிறது . 

அதன்படி , இந்திய அரசின் சார்பில் 2020 ஆம் ஆண்டிற்கான டென்சிங் நார்கே தேசிய விருதுக்கான  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன . 

மேற்காணும் விருதிற்கான விண்ணப்பம் மற்றும் முக்கிய விவரங்களை இணையதள முகவரியான ( youth parv.in ) மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 2020 – ஆம் ஆண்டிற்கான டென்சிங் நார்கே தேசிய விருது -க்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை 05.07 2021 – க்குள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் , நேரு விளையாட்டு அரங்கம் , பெரியமேடு சென்னை – 600 003 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் . கூடுதல் விவரங்கள் பெற 0462 2572632 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ச.கோபால சுந்தரராஜ் தெரிவித்துள்ளார்.

நிருபர் நெல்லை டுடே