தென்காசி, டிச. 4:
டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருதுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபாலசுந்தரராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: 2021ஆம் ஆண்டிற்கான டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருதானது 2022ஆம் ஆண்டின் திருவள்ளுவர் திருநாளன்று வழங்கப்பட உள்ளது.
எனவே தென்காசி மாவட்டத்தில், தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபட்ட தமிழறிஞர்கள், கவிஞர்கள், சான்றோர் மற்றும் ஆதிதிராவிடர் மக்களின் முன்னேற்றத்திற்கு அரிய தொண்டு செய்பவர்கள் ஆகியோரில் டாக்டர்.அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருதினைப் பெற விரும்புவோர்,
அதற்கான விண்ணப்பப் படிவத்தினை www.tenkasi.nic.in/form-ல் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாவட்ட ஆதிதிராவிடர் நலஅலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம், இரயில்வே பீடர் சாலை, தென்காசி-627811என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோஅனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். www.tenkasi.nic.in
செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today