தென்காசி, டிச. 28:

தென்காசி மாவட்டத்தில் பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவை புரிந்த பெண்மணிக்கு 2021-2022ம் ஆண்டிற்கான ஒளவையார் விருது வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இவ்விருது 08.03.2022 அன்று உலக மகளிர் தினவிழா கொண்டாடும் நாளன்று வழங்கப்படும்.

இவ்விருதுக்கு  ரொக்கப்பரிசு மற்றும் தங்கபதக்கம், சான்று மற்றும் சால்வை வழங்கப்படும். ஒளவையார் விருது முதலமைச்சரால் வழங்கப்படும். 2021 -2022 ஆம் ஆண்டிற்கான  விருது பெற தகுதியானவர்களைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள்  அவை தொடர்பான ஆவணங்களுடன் வரவேற்கப்படுகின்றன.

விருது பெற விண்ணப்பிப்பவர்கள் அதற்கான உரிய படிவத்தினை  திருநெல்வேலி மாவட்ட சமூகநல அலுவலகம், பி4/104 சுப்பிரமணியபுரம் தெரு, வ.உ.சி. மைதானம் எதிரில், திருவனந்தபுரம் ரோடு, பாளையங்கோட்டை திருநெல்வேலி -627 002.  பெற்று பூர்த்தி செய்த படிவத்தினை வருகிற 29.12.2021-க்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இத்தகவலை தென்காசி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது. https://www.awards.tn.gov.in

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today