தென்காசி, செப் .28:
தென்காசியில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஒன்றிய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஒன்றிய மோடி அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரியும், நாடு முழுவதும் பொது வேலை நிறுத்தம் மறியல் நடைபெற்றது.
அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டத்தில் அனைத்து தொழிற்சங்கங்கள் அனைத்து கட்சிகள் சார்பில் நடைபெற்ற வேலை நிறுத்தம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதன்படி தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.வேலு மயில், தலைமை தாங்கினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் இசக்கித்துரை, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் டேனி அருள் சிங், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேற்படி ஆர்ப்பாட்டத்தில் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் ஏராளமான தொழிலாளர்கள், பெண்கள் கலந்து கொண்டு ஒன்றிய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கோஷமிட்டனர்.
செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today/