தென்காசி, நவ. 30:

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஒன்றிய அலுவலகத்தில் ஆலங்குளம், கடையம், கீழப்பாவூர்,தென்காசி, செங்கோட்டை ஆகிய ஐந்து ஒன்றியங்களில் உள்ள ஊராட்சிகளில்  கடந்த ஆண்டு செலவழிக்கப்பட்ட செலவினங்கள் தணிக்கை மற்றும் குறைபாடுகள் கண்டுபிடிக்கப் பட்ட பஞ்சாயத்துகளுக்கு நேற்று காலை முதல் ஆலங்குளம் ஒன்றிய அலுவலகத்தில் வைத்து நெல்லை தணிக்கைக்குழு உதவி இயக்குனர் முகம்மது லெப்பை மற்றும் தென்காசி தணிக்கைக்குழு உதவி இயக்குனர் உமாசங்கர் ஆகியோர் தணிக்கை செய்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று மாலை நெல்லை லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு ஆலங்குளம் யூனியன் அலுவலகத்தில் ஏராளமான லஞ்சப்பணம்  கைமாறுவதாக ரகசியத் தகவல் கிடைத்து. உடனே சம்பவ இடத்துக்கு நெல்லை லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி மெர்கலின் எஸ்கால் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ராபின் ஞானசிங், அனிதா உட்பட 6 பேர் கொண்ட குழுவினர் ஆலங்குளம் ஒன்றிய  அலுவலகத்தில் நுழைந்தனர்.

அப்போது அங்கு இருந்த பஞ்சாயத்து செயலர்கள் பிடிஓ மற்றும் அங்கு இருந்த அரசு அலுவலர்களிடம் சோதனையிட்டனர். நெல்லையிலிருந்து லஞ்ச ஒழிப்பு துறையினர் வந்து அரசு அலுவலர்களிடம் லஞ்ச ஒழிப்பு சோதனை செய்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. https://www.incometaxindia.gov.in

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today