தென்காசி, அக்.27:
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி.எச்.மனோஜ் பாண்டியன் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து கோரிக்கை மனுக்கள் பெற்று நிறைவேற்றி வருகிறார்.
கடையம் யூனியன் வள்ளியம்மாள்புரம் கிராமத்தில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.
அப்போது மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ.வை சந்தித்த தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணியாளர்கள், தங்களுக்கு 3 மாதமாக சம்பளபாக்கி இருப்பதாகவும், அவற்றை விரைந்து பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதுசம்பந்தமாக மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. உடனடியாக அதே இடத்தில் இருந்து சென்னையில் உள்ள டி.ஆர்.டி.ஏ. இயக்குனர் கோபாலை தொடர்பு கொண்டு, தேசியவேலை உறுதியளிப்பு திட்ட பணியாளர்களுக்கு உடனடியாக சம்பள பாக்கியை கொடுக்கவேண்டும் என கோரிக்கைவிடுத்தார்.
இதற்கு பதில் அளித்த இயக்குனர் கோபால், இதுதொடர்பாக மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று உடனடியாக சம்பளபாக்கி தொகையை வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதிஅளித்தார்.
கடையம் தெற்கு ஒன்றிய செயலாளர் முருகேசன், மடத்தூர் பஞ்சாயத்து தலைவர் முத்தமிழ் செல்வி, கழக செயலாளர்கள் பொன்ராஜ், அருள்முத்துராஜ், முத்துகிருஷ்ணன், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப செயலாளர் ஆறுமுகம், வினோத் உள்பட நிர்வாகிகள் பலர் உடன் சென்றனர். https://www.tenkasi.nic.in
செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today