தென்காசி, டிச.20:

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உலக எய்ட்ஸ்  தினத்தை முன்னிட்டு எய்ட்ஸ்  நோய் பற்றிய  கருத்தரங்கம்  நடைபெற்றது. இந்த கருத்தரங்கு நிகழ்ச்சிக்கு தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப் பாளரும் ,அரசு டாக்டர்கள் சங்க மாநில செயலாளருமான மருத்துவர் இரா.ஜெஸ்லின் தலைமை தாங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக இணை இயக்குனர் நலப்பணிகள் மருத்துவர் வெங்கட்ரங்கன், துணை இயக்குனர் காசநோய்  மருத்துவர் வெள்ளைச்சாமி, ,ஆய்க்குடி மருத்துவர் செந்தில் குமார், தென்காசி மருத்துவமனை அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் விஜயகுமார், மருத்துவர் மணிமாலா, தென்காசி குழந்தைகள் நல மருத்துவர் முஸ்ஸாமில்,மருத்துவர் ராஜலட்சுமி  கலந்து கொண்டு  சிறப்புரை யாற்றினார்கள். 

தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க மாவட்டச் செயலாளர் மருத்துவர் செந்தில் சேகர், மாவட்ட பொருளாளர் மருத்துவர் ராஜேஷ் கண்ணா, அரசு டாக்டர்கள் சங்க மாவட்ட செயலாளர் மருத்துவர் முகமது இப்ராஹிம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து சிறப்புரையாற்றினார்கள். 

நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட மூத்த மருத்துவர்கள் மருத்துவர் சுகந்த குமாரி, மருத்துவர் முத்தையா, மருத்துவர் ராமகிருஷ்ணன், மீரான் மருத்துவமனை மருத்துவர் அப்துல் அஜீஸ், முகைதீன் அகமது ஆகியோரை தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை மருத்துவர்கள் பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர்.

இந்த கருத்தரங்கில் தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை உறைவிட மருத்துவர்  அகத்தியன், மருத்துவர் மல்லிகா, மருத்துவர் மாரிமுத்து,  புளியங்குடி அரசு மருத்துவர் ராஜ்குமார் , மருத்துவர் புனிதவதி,  மருத்துவர் அனிதா பாலின், மருத்துவர் தமிழருவி, மருத்துவர் அன்ன பேபி  ,மருத்துவர் கிருத்திகா ஷைலினி, மருத்துவர் கார்த்திக் ,மருத்துவர் முத்துக்குமாரசாமி, மருத்துவர் மணிமாலா, மருத்துவர் மது, மருத்துவ ராம்குமார் , மருத்துவர் செல்வ பாலா ,மருத்துவர கீர்த்தி, மருத்துவர் தேவி உத்தமி, மருத்துவர் தயாளன், மருத்துவர் சுரேஷ் மில்லர், மற்றும் பல மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.  

கருத்தரங்க நிகழ்ச்சிகளை   மருத்துவர் கோபிகா,மருத்துவர் ஜெரின்  இருவரும் இணைந்து தொகுத்து வழங்கினர். அரசு டாக்டர்கள் சங்க மாவட்ட செயலாளர் மருத்துவர் முஹம்மது இப்ராஹிம் நன்றி கூறினார்.  https://www.tnhealth.tn.gov.in

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today